டி20 உலகக் கோப்பைத் தொடரில் 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணிகள்!
டி20 உலகக் கோப்பைத் தொடரில் நேபாளத்துக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்க அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது.
டி20 உலகக் கோப்பைத் தொடரில் நேபாளத்துக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்க அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது.
டி20 உலகக் கோப்பைத் தொடரில் கிங்ஸ்டவுனில் நடைபெற்ற போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் நேபாளம் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்கள் எடுத்தது.
116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய நேபாளம் 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 114 ரன்கள் எடுத்தது. இதன்மூலம், வெற்றிக்காக கடைசி வரைப் போராடிய நேபாளம் ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
Advertisement
Advertisement
டி20 உலகக் கோப்பைத் தொடரில் ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணிகள்
தென்னாப்பிரிக்கா - நியூசிலாந்துக்கு எதிராக, 2009
நியூசிலாந்து - பாகிஸ்தானுக்கு எதிராக, 2010
இந்தியா - தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக, 2012
இந்தியா - வங்கதேசத்துக்கு எதிராக, 2016
ஜிம்பாப்வே - பாகிஸ்தானுக்கு எதிராக, 2022
தென்னாப்பிரிக்கா - நேபாளத்துக்கு எதிராக, 2024
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.