ரோஹித் சர்மா (கோப்புப் படம்) 
டி20 உலகக் கோப்பை

சூப்பர் 8 சுற்றுக்கு இந்தியா தயார்: ரோஹித் சர்மா

சூப்பர் 8 சுற்றுக்குத் தயாராக இருப்பதாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

DIN

சூப்பர் 8 சுற்றுக்குத் தயாராக இருப்பதாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அயர்லாந்து, பாகிஸ்தான் மற்றும் அமெரிக்காவுக்கு எதிரான வெற்றிகள் இந்திய அணியை சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைய வழிவகுத்தது. சூப்பர் 8 சுற்றில் நாளை மறுநாள் (ஜூன் 20) ஆப்கானிஸ்தானை எதிர்த்து இந்திய அணி விளையாடவுள்ளது.

இந்த நிலையில், சூப்பர் 8 சுற்று சற்று பரபரப்பாக இருக்கப் போகிறது. இருப்பினும், இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்குத் தயாராக இருப்பதாக ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் விளையாடிய அடுத்த 3 - 4 நாள்களில் அடுத்த இரண்டு போட்டிகளில் விளையாடவுள்ளோம். குறுகிய நாள்களில் அடுத்தடுத்து போட்டிகளில் விளையாடவுள்ளதால், சிறிது பரபரப்பாக இருக்கப் போகிறது. ஆனால், இதுபோன்ற சூழல்களை ஏற்கனவே சந்தித்த அனுபவம் இருக்கிறது. நாங்கள் அதிக பயணம் செய்து போட்டிகளில் விளையாடுவதால், அடுத்தடுத்து போட்டிகள் குறுகிய இடைவெளியில் இருப்பதை ஒரு காரணமாக கூறப் போவதில்லை. இந்திய அணி வீரர்கள் சூப்பர் 8 சுற்றில் விளையாட தயாராக இருக்கிறார்கள் என்றார்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக முதல் சூப்பர் 8 போட்டியில் விளையாடும் இந்திய அணி வருகிற ஜூன் 22 ஆம் தேதி வங்கதேசத்துக்கு எதிராகவும், ஜூன் 24 ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் சூப்பர் 8 சுற்றின் அடுத்தடுத்தப் போட்டிகளில் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாஜக கூட்டணியால் உண்மையான அதிமுக தொண்டர்கள் அதிருப்தி: முதல்வர் ஸ்டாலின்

கூலி = 100 பாட்ஷா... நாகார்ஜுனாவின் அதிரடியான பேச்சு!

ஆடிப்பெருக்கு: காவிரி கரையில் திரண்ட மக்கள்!

எனக்கும் சத்யராஜுக்கும் முரண்பாடு... ஆனால்..: ரஜினிகாந்த்

தீரன் சின்னமலை நினைவு நாள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் மரியாதை!

SCROLL FOR NEXT