டி20 உலகக் கோப்பையில் முதன்மையான வீரராக இருந்தால் இதைச் செய்ய வேண்டுமெனக் கூறியுள்ளார்.
டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி ஆப்கானிஸ்தானை நாளை (ஜூன் 20) எதிர்கொள்கிறது.
சர்வதேச டி20 பேட்டர்கள் தரவரிசையில் 837 புள்ளிகளுடன் சூர்யகுமார் யாதவ் முதலிடத்திலும் இங்கிலாந்தின் பிலிப் சால்ட் 771 புள்ளிகளுடன் 2ஆம் இடத்திலும் பாபர் அஸாம் 755 புள்ளிகளுடன் 3ஆவது இடத்திலும் இருக்கிறார்கள்.
நியூயார்க் மைதானங்களில் நடைபெற்ற போட்டிகளில் அதிகமாக ரன்கள் அடிக்கமுடியவில்லை. சர்வதேச டி20யில் முதலிடம் வகிக்கும் இந்தியாவின் சூர்யகுமார் யாதவ்கூட 49 பந்துகளில் மட்டுமே 50 ரன்கள் அடித்தார். அவரது பேட்டிங் ஸ்டிரைக் ரேட் சராசரியாக 168 ஆக இருக்கும். ஆனால் இந்த நியூயார்க் போட்டிகளில் மிகவும் குறைவாகவே இருந்தது குறிப்பிடத்தக்கது.
சூர்யகுமார் யாதவ் பத்ரிகையாளர்கள் சந்திப்பில் பேசியதாவது:
2 ஆண்டுகளாக முதன்மையான டி20 பேட்டராக இருக்கும்போது வித்தியாசமான சூழ்நிலைகளில் பேட்டிங் செய்ய வேண்டும். அணிக்கு தேவையானபடி விளையாட வேண்டும். அதுதான் நல்ல பேட்டருக்கு அழகு. அதைத்தான் நானும் முயற்சிக்கிறேன்.
ஆடுகளத்தில் வேகம் இல்லாதபோது நாமாக பந்துக்கு வேகத்தினை கொடுக்கவியலாது. அந்த மாதிரி நேரங்களில் நாம் விவேகமாக செயல்பட வேண்டும். போட்டியில் நீண்ட நேரம் நின்று விளையாட வேண்டும்.
சூழ்நிலைக்கு ஏற்றவாறும் அப்போது அணிக்கு என்ன தேவை என்பதையும் புரிந்து விளையாட வேண்டும். அப்போது ஆடுகளத்தில் இருக்கும் நபருடன் பேசி, அழுத்ததைக் குறைத்து நீண்ட நேரம் விளையாட வேண்டும்.
நான் எங்கு விளையாடினாலும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறேன் (சிரிக்கிறார்). இங்கு (நியூயார்க்) விளையாடுவது மகிழ்ச்சியாக இல்லை என்று கூற முடியாது. இருப்பினும் ஆடுகளம் சற்று கடினமாகவும் வித்தியாசமாகவும் இருக்கிறது. ஆனால் அதுவும் சவாலாக இருப்பதால் மகிழ்ச்சிதான் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.