டி20 உலகக் கோப்பை போட்டியில் அமெரிக்காவை மே.இ.தீ. அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
முதலில் பேட்டிங் செய்த அமெரிக்க அணி 19.5 ஓவர்களில் 128க்கு ஆல் அவுட்டானது. அடுத்து விளையாடிய மே.இ,தீ. அணி 10.5 ஓவர்களில் 130/1 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
அமெரிக்க அணியில் அதிகபட்சமாக கோஸ் 29 ரன்கள் அடித்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்கள்.
மே.இ.தீ. அணி சார்பில் ரஸ்ஸெல்,ரோஸ்டன் சேஸ் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தார்கள். பேட்டிங்கில் தொடக்க வீரர் சாய் ஹோப் 39 பந்துகளில் 82 ரன்கள் அடித்து அசத்தினார்.
நிகோலஸ் பூரண் 27 ரன்கள் அடித்தார். ஆட்ட நாயகன் விருது ரோஸ்டன் சேஸ்ஸுக்கு தரப்பட்டது.
இந்த வெற்றியின் மூலம் அமெரிக்க அணி உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறுகிறது. மே.இ.தீ. அணி அரையிறுதி வாய்ப்பினை தக்க வைத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.