படம் | AP
டி20 உலகக் கோப்பை

விராட் கோலிக்கு ஆதரவாக பேசிய ரோஹித் சர்மா!

விராட் கோலிக்கு ஆதரவாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேசியுள்ளனர்.

DIN

விராட் கோலிக்கு ஆதரவாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேசியுள்ளனர்.

டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் நாளை (ஜூன் 29) மோதவுள்ளன. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி பார்படாஸில் நடைபெறவுள்ளது. ஒருபுறம் உலகக் கோப்பையை ஒரு முறை கூட வெல்லாத தென்னாப்பிரிக்க அணியும், மற்றொரு புறம் 11 ஆண்டுகளாக ஐசிசி கோப்பைக்கானத் தேடலில் உள்ள இந்திய அணியும் இறுதிப்போட்டியில் மோதிக் கொள்கின்றன.

இந்திய அணியில் விராட் கோலியின் ஃபார்ம் குறித்து அதிகம் பேசப்படுகிறது. ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி, டி20 உலகக் கோப்பைத் தொடரில் பெரிய அளவில் ரன்கள் சேர்க்கவில்லை. இதுவரை விளையாடியுள்ள 7 போட்டிகளில் விராட் கோலி வெறும் 75 மட்டுமே எடுத்துள்ளார்.

இந்த நிலையில், விராட் கோலிக்கு ஆதரவாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேசியுள்ளனர்.

விராட் கோலி குறித்து ரோஹித் சர்மா பேசியதாவது: விராட் கோலி மிகச் சிறந்த வீரர். ஃபார்ம் என்பது பெரிய விஷயமில்லை. மிகப் பெரிய போட்டிகளில் இந்திய அணிக்காக அவர் சிறப்பாக செயல்பட்டுள்ளார். 15 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும் ஒருவருக்கு ஃபார்ம் என்பது பெரிய பிரச்னை கிடையாது. அவர் நன்றாக விளையாடும் முனைப்பிலேயே களமிறங்குகிறார். இறுதிப்போட்டியில் நன்றாக விளையாடுவதற்காக கூட விராட் கோலி தனது சிறப்பான ஆட்டத்தை சேமித்து வைத்திருக்கலாம் என்றார்.

விராட் கோலி குறித்து ராகுல் டிராவிட் பேசியதாவது: அதிக ரிஸ்க் அடங்கிய தரத்திலான கிரிக்கெட்டினை விளையாடும்போது சில நேரங்களில் சரியாக விளையாடாமல் போகலாம். இங்கிலாந்துக்கு எதிரான இன்றையப் போட்டியில் கூட, விராட் கோலி அருமையான சிக்ஸர் ஒன்றை அடித்தார். அவர் நன்றாக விளையாடி ரன்கள் சேர்க்க முயற்சி செய்கிறார் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4 சுங்கச் சாவடிகள்: 50% கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு! - நீதிமன்றத்தில் தகவல்

ஐஐடி மும்பையில் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

நான் துரோகம் செய்யவில்லை, தற்கொலைக்கு முயன்றேன்..! விவாகரத்து பற்றி சஹால்!

மாலை மலர்ந்த ஊதா... அம்ரிதா ஐயர்!

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

SCROLL FOR NEXT