செüதியில் 350 தமிழர்கள் கொத்தடிமைகள்?
ராமநாதபுரம், ஆக. 3: செüதியில் 350-க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொத்தடிமைகளாக நடத்தப்படுவதாகவும் அவர்களை உடனே காப்பாற்றுமாறும் மத்திய அரசுக்கு சிலர் மனு அனுப்பியுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம், நல்லிருக்க
ராமநாதபுரம், ஆக. 3: செüதியில் 350-க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொத்தடிமைகளாக நடத்தப்படுவதாகவும் அவர்களை உடனே காப்பாற்றுமாறும் மத்திய அரசுக்கு சிலர் மனு அனுப்பியுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம், நல்லிருக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் கே. சேதுராஜா. இவர் மதுரை ஏஜெண்ட் மூலமாக மும்பை நிறுவனத்தால் செüதிக்கு வேலைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இவரும், அங்கு பணிபுரியும் பிற மாவட்டங்களைச் சேர்ந்த 21 பேரும் ஒன்று சேர்ந்து மத்திய அரசுக்கு, தாங்கள் கொத்தடிமைகளாக நடத்தப்படுவதாகவும், பல்வேறு சித்ரவதைக்கு ஆளாகி இருப்பதாகவும், தங்களை உடனே காப்பாற்றுமாறும் கடிதம் எழுதியுள்ளனர்.
அக் கடிதத்தில், ""ஒரு டிராவல்ஸ் மற்றும் ஏஜெண்டுகளால் பாதிக்கப்பட்டவர்கள் -இந்தியா'' என எழுதி, அனைவரும் கையெழுத்திட்டு தங்களது பாஸ்போர்ட் எண்ணையும் குறிப்பிட்டுள்ளனர்.
இக் கடித நகலை ராமநாதபுரத்தில் வசிக்கும் சேதுராஜாவின் சகோதரருக்கு அனுப்பியுள்ளனர். அக் கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது:
"விமான நிலையம் அல்லது மருத்துவமனையைச் சுத்தம் செய்ய ஒரு நபருக்கு ரூ. 10 ஆயிரம் சம்பளம் தருவதாக அழைத்து வந்து, ரூ. 6000 மட்டுமே சம்பளம் தருகின்றனர். தெரு கூட்டும் வேலை கொடுத்துள்ளனர். எங்களிடம் சொன்ன வேலையைக் கொடுங்கள் என்றால், உங்களை 4000 செüதி ரியால் கொடுத்து விலைக்கு வாங்கி இருக்கிறோம். நாங்கள் எந்த வேலை சொன்னாலும் செய்துதான் ஆக வேண்டும் என்கிறார்கள்.
எதிர்த்துக் கேட்பவர்களைத் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். சிலரை பைத்தியமாக மாற்றி விடுகின்றனர். நாங்கள் கொத்தடிமைகளாக நடத்தப்பட்டு வருகிறோம். நாங்கள் விலைக்கு விற்கப்பட்ட விவரம் எங்களுக்கு செüதி வந்த பிறகுதான் தெரிந்தது.
கூடுதல் சம்பளமோ, விடுப்போ தருவதில்லை. குடிநீர் வசதி இல்லை. தங்கி இருக்கும் இடத்தில் உள்ள கழிப்பறையில் துர்நாற்றம் வீசுகிறது. உடல்நிலை சரியில்லை என்றாலும் விடுப்பு தர மறுக்கின்றனர்.
இப்போது தரும் சம்பளம் சாப்பாட்டுக்கு மட்டுமே போதுமானதாக உள்ளது. தங்கி இருக்கும் அறையை விட்டு வெளியில் போக விடுவதில்லை. நாள் கூடக்கூட எங்களின் வாழ்க்கை நிலை கவலையடைந்து கொண்டே வருகிறது. தயவுசெய்து எங்கள் அனைவரையும் உடனடியாகக் காப்பாற்ற நடவடிக்கை எடுங்கள்' என்று அக் கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.
கொத்தடிமைகளாக இருப்பவர்கள் விவரம்: (ஊர் அடைப்பு குறிக்குள்) ராமநாதபுரம் மாவட்டம்-கே. சேதுராஜா (நல்லிருக்கை), தஞ்சாவூர் மாவட்டம்-ஆர். ராஜேஷ் கண்ணா, ஆர். பிரகாஷ் (திருவலஞ்சுழி), பி. ரமேஷ், வி. முருகேசன் (பேய் கலிக்காடு), திருநெல்வேலி மாவட்டம்-எஸ். சமுத்திரம், ஆர். விரலக்குட்டி (மாவடைக்கால்), எஸ். முருகன், ஏ. பரமசிவன், வி. கதிரேசன் (பன்னீர் ஊத்து), எஸ். நடராசன் (கல்லிடைக்குறிச்சி).
திருவண்ணாமலை மாவட்டம்-டி. ரமேஷ் (பவித்திரம்), கே. பொன்னுச்சாமி (பூப்பாண்டியபுரம் தண்டராம்பட்டு), விழுப்புரம் மாவட்டம்-காசிலிங்கம் (காட்டு வனஞ்சூர்), எஸ். மயிலாசலம் (செட்டி நகர்), ராஜேந்திரன் (தேவபண்டலம்), கே. கோவிந்தசாமி (ஆர்காவடி), மதுரை மாவட்டம்-எம். ஆறுமுகம் (சோழவந்தான்).
தூத்துக்குடி மாவட்டம்-எம். ராஜபாண்டியன் (நாகல்லாபுரம்), சிவகங்கை மாவட்டம்-எம். பாலமுருகன் (காரைக்குடி).
கோவை மாவட்டம்-ஸ்ரீசீனிவாசன் (மகாலெட்சுமி நகர்), கடலூர் மாவட்டம்-பி. சுப்பிரமணியன் (எடைசித்தூர்), கன்னியாகுமரி மாவட்டம்-ஏ. ஹபீப் ரகுமான், (மேக்கா மண்டபம்) ஆகியோர் ஒன்று சேர்ந்து கையெழுத்திட்டுள்ளனர்.
இதுகுறித்து கே. சேதுராஜாவின் சகோதரர் கூறியதாவது:
"மும்பையில் உள்ள ஒரு நிறுவனத்துக்கு, மதுரை முகவர் மூலமாக தம்பியை செüதிக்கு அனுப்பி வைத்தோம். இது போன்று தமிழகம் முழுவதும் ஏஜெண்டுகள் ஆள்களைத் தேர்வு செய்து செüதிக்கு அனுப்பிக் கொண்டே இருக்கிறார்கள். பிறர் ஏமாந்துவிடக் கூடாது என்பதற்காக இதைத் தெரிவிக்கிறோம்.
நான் எப்படியாவது தப்பித்து வேறு எதாவது ஒரு கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்து விடுவேன் என நினைக்கிறேன். செüதியில் அக ம்ஹத்ஹப் ஹக ஹழ்ஹக்ஷண் ஞ்ழ்ர்ன்ல்ள் என்ற கம்பெனியில் சுமார் 350-க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொத்தடிமைகளாக நடத்தப்படுகின்றனர்.
இவர்களைக் காப்பாற்றத் தேவையான நடவடிக்கைகளை விரைந்து செய்யுமாறு தம்பி சேதுராஜா தெரிவித்துள்ளார்' என்று அவரது சகோதரர் தெரிவித்தார்.