புற்றீசல் போல் இணையதள மையங்களில் குவியும் பள்ளி மாணவர்கள்
பொன்னேரி, டிச. 23: பொன்னேரி, மீஞ்சூர் பகுதிகளில் உள்ள இணையதள மையங்களில் பள்ளி மாணவர்கள் குவிவதால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் நிலையில் உள்ளது. பள்ளிக்கு செல்வதாக கூறி செல்லும் பெரும்பாலான
பொன்னேரி, டிச. 23: பொன்னேரி, மீஞ்சூர் பகுதிகளில் உள்ள இணையதள மையங்களில் பள்ளி மாணவர்கள் குவிவதால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் நிலையில் உள்ளது.
பள்ளிக்கு செல்வதாக கூறி செல்லும் பெரும்பாலான மாணவர்கள் பள்ளி நேரத்திலும், பள்ளியில் இடைவேளை விடும் நேரத்திலும் அருகில் உள்ள இணையதள மையத்துக்கு புற்றீசல் போல் படையெடுத்து செல்கின்றனர்.
அங்கு ஏற்கெனவே கணினியில் பதிவு செய்து வைத்திருக்கும் கம்ப்யூட்டர் கேம்ûஸ ஒரு மணி நேரம் முதல் இரண்டு மணி நேரம் வரை விளையாடி வருகின்றனர். மாணவர்கள் இணையதள மையத்துக்கு வருவதால் அதை நடத்துபவர்களுக்கு கிடைக்கும் வருமானத்தை எண்ணி அவர்களும் மாணவர்களை பள்ளி செல்லும்படி கண்டிப்பதில்லை. இதன் காரணமாக ஒரு சில மாணவர்கள் பள்ளிக்கு கூட செல்லாமல் இணையதள மையத்திலேயே ஒரு நாள் முழுவதையும் கழித்து விடுகின்றனர்.
Advertisement
இது குறித்து பொன்னேரி பகுதியில் உள்ள சமூக நல ஆர்வலர் ஒருவர் கூறுகையில், ""வசதி படைத்தோர் தங்கள் பிள்ளைகளை மெட்ரிகுலேஷன் பள்ளியில் சேர்த்து அவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களின் பிள்ளைகள் அரசுப் பள்ளியில் சேர்க்கப்படுகின்றனர். இதுபோன்று சேர்க்கப்படும் பெரும்பாலானோரின் பிள்ளைகள் கிராம பகுதியில் இருந்து பொன்னேரி, மீஞ்சூர் ஆகிய இடங்களில் உள்ள பள்ளிகளில் பயில்கின்றனர்.
இங்கு படிக்கும் மாணவர்கள் கம்ப்யூட்டர் கேம்ஸ் எனும் விளையாட்டு மூலம் ஈர்க்கப்பட்டு, நாள் முழுதும் இணையதள மையத்தில் குவிந்து விடுகின்றனர்.
இந்த விளையாட்டுக்கு ஒரு மணி நேரத்துக்கு 20 ரூபாய் வசூலித்தாலும் அந்த தொகையை ஒரு பொருட்டாக கருதாமல் மாணவர்கள் விளையாடி வருகின்றனர்.
இதன் காரணமாக மாணவர்கள் கண் கெடும் அபாய நிலையும் உள்ளது. மேலும் அவர்கள் இளம் வயதிலேயே திசை மாறி செல்லும் நிலையும் உள்ளது'' என்றார்.