முகப்பு
தமிழ்நாடு

வீர தீரச் செயலுக்கான அண்ணா பதக்கம் பரிசுத் தொகை ரூ.25 ஆயிரமாக உயர்வு: அரசு உத்தரவு வெளியீடு

சென்னை, டிச.23: வீர, தீரச் செயல் புரிந்தோருக்கு ஆண்டு தோறும் வழங்கப்படும் அண்ணா பதக்கத்தின் பரிசுத் தொகை உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. வெள்ளம் போன்ற இயற்கை பேரழிவில்

Updated On : 25 டிசம்பர், 2023 at 4:45 PM
பகிர்:

சென்னை, டிச.23: வீர, தீரச் செயல் புரிந்தோருக்கு ஆண்டு தோறும் வழங்கப்படும் அண்ணா பதக்கத்தின் பரிசுத் தொகை உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

வெள்ளம் போன்ற இயற்கை பேரழிவில் இருந்து மக்களை காப்பாற்றியது, உயிரையும் பொருட்படுத்தாமல் பல்வேறு மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டது போன்ற செயல்களில் ஈடுபட்டோருக்கு வீர, தீரச் செயலுக்கான அண்ணா பதக்கம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்படுவது வழக்கம்.

கடந்த 1980}ம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் இந்தப் பதக்கம் வழங்கப்பட்டு வருகிறது.

பொது மக்களில் மூன்று பேருக்கும், அரசுப் பணியில் உள்ள மூவருக்கும் இந்தப் பதக்கம் வழங்கப்படும்.

தேர்வு முறை என்ன?தாங்கள் புரிந்த வீர, தீரச் செயல் குறித்து எழுதி அனுப்புமாறு பொது மக்களுக்கு மாவட்ட வாரியாக அறிவிப்பு வெளியிடப்படும்.

இதன்படி, பொது மக்கள், அரசுப் பணியில் உள்ளோர் தாங்கள் புரிந்த வீரச் செயல்கள் குறித்து மாவட்ட ஆட்சியருக்கு எழுதி அனுப்புவர்.

இதை, தலைமைச் செயலகத்தில் உள்ள பொதுத் துறைக்கு மாவட்ட ஆட்சியர் அனுப்பி வைப்பார்.

5 செயலாளர்கள் அடங்கிய...

÷விண்ணப்பங்கள் அனைத்தும் பொதுத் துறையிடம் இருந்து ஐந்து செயலாளர்கள் அடங்கிய குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும். தகுதியான விண்ணப்பதாரர்களை ஐந்து செயலாளர்கள் கொண்ட குழு தேர்ந்தெடுக்கும்.

இந்தக் குழு பரிந்துரைக்கும் நபர்களின் பட்டியல் முதல்வருக்கு அனுப்பி வைக்கப்படும். அந்தப் பட்டியலில் இருந்து உரியவர்களைத் தேர்ந்தெடுத்து முறையான அறிவிப்பை முதல்வர் வெளியிடுவார்.

பரிசுத் தொகை அதிகரிப்பு...

ஒவ்வொரு ஆண்டும் குடியரசுத் தினத்தின் போது இந்த விருதினை முதல்வர் அளிப்பார். பொது மக்களில் மூவருக்கும், அரசுப் பணியில் உள்ள மூவருக்கும் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. ரூ.3,500 மதிப்புள்ள தங்கமுலாம் பூசிய அண்ணா வீரப் பதக்கமும், ரூ.10 ஆயிரம் காசோலையும் வழங்கி கௌரவிக்கப்படுவர்.

இப்போது, அந்தத் தொகை ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், பதக்கச் செலவுக்கான தொகை ரூ.3,500}லிருந்து ரூ.5 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசு உத்தரவை பொதுத் துறை செயலாளர் தேவ ஜோதி ஜெகராஜன் வெளியிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.