முகப்பு
தமிழ்நாடு

பழவேற்காட்டிலிருந்து ஏற்றுமதியாகும் பனை ஓலை பொருள்கள்

  பொன்னேரி, ஜூன் 7:   பொன்னேரி அருகே உள்ள கடலோர கிராமமான பழவேற்காட்டில் செய்யப்படும் பனை ஓலை வீட்டு உபயோகப் பொருள்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.   பனை ஓலை என்றாலே நமக்கு நினைவுக்கு வரு

தமிழ்நாடு

பழவேற்காட்டிலிருந்து ஏற்றுமதியாகும் பனை ஓலை பொருள்கள்

  பொன்னேரி, ஜூன் 7:   பொன்னேரி அருகே உள்ள கடலோர கிராமமான பழவேற்காட்டில் செய்யப்படும் பனை ஓலை வீட்டு உபயோகப் பொருள்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.   பனை ஓலை என்றாலே நமக்கு நினைவுக்கு வரு

Updated On : 25 டிசம்பர், 2023 at 2:15 PM
பகிர்:

பொன்னேரி, ஜூன் 7:   பொன்னேரி அருகே உள்ள கடலோர கிராமமான பழவேற்காட்டில் செய்யப்படும் பனை ஓலை வீட்டு உபயோகப் பொருள்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

  பனை ஓலை என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது மின்சாரம் இல்லாத நாள்களில் நாம் உபயோகப்படுத்தும் பனை ஓலை கை விசிறிகள் தான். பொன்னேரி தாலுகாவில் உள்ள கடலோர கிராமமான பழவேற்காட்டில் பனை ஓலை பொருள்கள் 328 குடும்பங்களை வாழவைத்துக் கொண்டிருக்கிறது.

   குறைந்த எண்ணிக்கையிலான உறுப்பினர்களுடன் பழவேற்காடு பனை ஓலை மகளிர் கூட்டுறவு சங்கம் 1959-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. மிகப்பழமை வாய்ந்த இந்த மகளிர் கூட்டுறவு சங்கம் மூலம் அப் பகுதியில் உள்ள 300க்கும் மேற்பட்ட பெண்கள் வேலை வாய்ப்பைப் பெற்று அவர்கள் வாழ்க்கையில் சுயமாக நின்று வெற்றி பெற்று வருகின்றனர்.

  இங்கு பனை ஓலை மூலம் ஸ்வீட் பெட்டி, குப்பைக்கூடை, சதுர கிப்ட் பெட்டி உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருள்கள் செய்யப்படுகின்றன. அவை ஜெர்மன், ஆஸ்திரியா, நெதர்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்படுகிழன்றன.

  மேலும் மாநில அளவில் கடந்த 2001-ம் ஆண்டு முதல் பழவேற்காடு பனை ஓலை மகளிர் கூட்டுறவு சங்கம் லாபத்துடன் இயங்கி வருகிறது. இங்கு செய்யப்படும் வீட்டு உபயோக பனை பொருள்கள் தமிழகத்தில் நடைபெறும் பொருட்காட்சிகளில் விற்பனை செய்யப்படுகிறது.

  இந்த பனை ஓலை கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர்களாகச் சேரும் பெண்களுக்கு பனை ஓலையில் பொருள்கள் செய்வது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டு அவர்களுக்கு வேலை வாய்ப்பும் அளிக்கப்பட்டு வருகிறது. பழமை வாய்ந்த பொருள்களை மக்கள் மறந்துள்ள நிலையில் பனை ஓலை பொருள்கள் மூலம் இப்பகுதியில் உள்ள பெண்கள் வேலை வாய்ப்பு பெற்று அதன் மூலம் தங்கள் குடும்பங்களை வழி நடத்தி செல்வது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →