தமிழ்நாடு

நாகப்பா கடத்தல் வழக்கு: வீரப்பன் கூட்டாளிகள் 19 பேர் விடுதலை

சாம்ராஜ்நகர், மார்ச் 31: வீரப்பனால் கடத்தப்பட்ட மறைந்த கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பா கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 19 பேரையும் விடுதலை செய்து சாம்ராஜ்நகர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.  

தினமணி

சாம்ராஜ்நகர், மார்ச் 31: வீரப்பனால் கடத்தப்பட்ட மறைந்த கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பா கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 19 பேரையும் விடுதலை

செய்து சாம்ராஜ்நகர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

 தமிழக போலீஸôரால் சுட்டுக் கொல்லப்பட்ட சந்தனக் கடத்தல் வீரப்பனால் 2002-ம் ஆண்டு ஆகஸ்ட் 25-ம் தேதி நாகப்பா கடத்தப்பட்டார்.

சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் அருகேயுள்ள காமகெரேயில் உள்ள நாகப்பாவின் பண்ணை வீட்டுத் தோட்டத்தில் இருந்தபோது வீரப்பனும் அவரது கூட்டாளிகளும் வந்து நாகப்பாவை கடத்திச் சென்றனர்.

 அதைத் தொடர்ந்து வனப்பகுதியில் 2002-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 8-ம் தேதி, சுட்டுக் கொல்லப்பட்ட நாகப்பாவின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதை அடுத்து நாகப்பாவை கடத்தியதாக வீரப்பன் அவரது கூட்டாளிகள் சேத்துக்குழி கோவிந்தன்,  சந்திரே கெüடா, சேதுமணி உள்பட 23 பேர் மீது ஹனூர் போலீஸôர் வழக்குப்  பதிவு செய்து விசாரணை நடத்தி 23 பேர் மீதும் சாம்ராஜ்நகர் சிறப்பு நீதிமன்றத்தில்  வழக்குத் தொடர்ந்தனர்.

 நீதிபதி கே.எச். மல்லப்பா இந்த வழக்கை விசாரித்து வந்தார். 44 சாட்சிகள் உள்பட மொத்தம் 199 பேரிடம் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த வீரப்பன், சேத்துக்குளி கோவிந்தன், சந்திரே கெüடா, மற்றும் சேதுமணி ஆகியோர் போலீஸôர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இறந்தனர்.

 மற்ற 19 பேர் மீது மட்டும் விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 19 பேரையும் விடுதலை செய்து நீதிபதி மல்லப்பா புதன்கிழமை  உத்தரவிட்டார்.

குற்றம் சுமத்தப்பட்டவர்களை அடையாளம் காட்ட நாகப்பா  குடும்பத்தினர் தவறிவிட்டனர், மேலும் குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக சாட்சியங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை என்று கூறி 19 பேரையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

  இந்தத் தீர்ப்பு குறித்து நாகப்பாவின் மனைவி பரிமளா கூறியது: அநியாயமாக  கொலை செய்யப்பட்ட எனது கணவருக்கு மேலும் ஓர் அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்வது குறித்து விரைவில் தீர்மானிக்கப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரண்டு பைக்குகள் மோதி விபத்து: 2 போ் உயிரிழப்பு

இஸ்ரேலியா்கள் கொடைக்கானல் வருகை: துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இருவா் கைது

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

SCROLL FOR NEXT