பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் காலணி வழங்கப்படுமா?
பொன்னேரி, பிப். 24: பொன்னேரி வட்டம் மீஞ்சூர் ஒன்றியம், மெதூர் கிராமத்தில் வசிக்கும் ஏழை மாணவர்கள் 50 பேர் செருப்பின்றி தினமும் 2 கி.மீ. தூரமுள்ள பள்ளிக்கு நடந்து சென்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட
தமிழ்நாடுபள்ளி மாணவர்களுக்கு மீண்டும் காலணி வழங்கப்படுமா?
பொன்னேரி, பிப். 24: பொன்னேரி வட்டம் மீஞ்சூர் ஒன்றியம், மெதூர் கிராமத்தில் வசிக்கும் ஏழை மாணவர்கள் 50 பேர் செருப்பின்றி தினமும் 2 கி.மீ. தூரமுள்ள பள்ளிக்கு நடந்து சென்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட
பொன்னேரி, பிப். 24: பொன்னேரி வட்டம் மீஞ்சூர் ஒன்றியம், மெதூர் கிராமத்தில் வசிக்கும் ஏழை மாணவர்கள் 50 பேர் செருப்பின்றி தினமும் 2 கி.மீ. தூரமுள்ள பள்ளிக்கு நடந்து சென்று வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் மீஞ்சூர், சோழவரம் ஆகிய இரண்டு ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இதில் 300-க்கும் மேற்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள் அமைந்துள்ளன. அதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
கிராம பகுதிகளில் வறுமை கோட்டுக்குக்கீழே வசிக்கும் ஏழை மக்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளியில் சேர்த்து படிக்க வைப்பதற்காக அரசு மதிய உணவு திட்டம், இலவச சீருடை, பாட புத்தகம் மற்றும் நோட்டு புத்தகங்கள், சைக்கிள் ஆகியவற்றை வழங்கி வருகிறது.
இத்துடன் இலவச காலணியும் பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இலசவமாக காலணி வழங்கும் திட்டம் மட்டும் சில ஆண்டுகளாக நிறுத்தப்பட்டு விட்டது. இதன் காரணமாக கிராம பகுதியில் இருந்து பள்ளி படிக்க செல்லும் ஏழை மாணவர்கள் பள்ளிக்கு காலணியின்றி நடந்து சென்று வருகின்றனர்.÷காலணி அணிவதால் பெரும்பாலான தொற்று நோய்கள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது என மருத்துவ உலகம் தெரிவிக்கின்றது. இதன் காரணமாக செருப்பு அணியாமல் செல்லும் மாணவர்களுக்கு பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. தொற்று நோய் ஏற்படுவதன் காரணமாக ஏழ்மை நிலையில் பள்ளி படிப்பை படிக்கும் மாணவர்கள் படிப்பை நிறுத்த வேண்டிய நிலை உள்ளது.
இது குறித்து மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியர் ஒருவரிடம் கேட்ட போது, 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இலவச சீருடை மற்றும் நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் இலவச காலணி தற்போது வழங்கப்படுவதில்லை என கூறினார்.
கலர் டி.வி, கேஸ் அடுப்பு, காங்கிரீட் வீடுகள், இரண்டு ஏக்கர் நிலம் உள்ளிட்டவற்றை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கும் அரசு தமிழகம் முழுதும் தொடக்கப் பள்ளிகளில் ஏழ்மை நிலையில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச காலணி வழங்கும் திட்டத்தை கைவிட்டது ஏன் என கிராம பகுதிகளில் வசிக்கும் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
பொருளாதரத்தில் நடுத்தர நிலையில் உள்ள மக்கள் தங்களின் பிள்ளைகளை தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் சேர்த்து காலில் ஷூ அணிவித்து அழகு பார்க்கின்றனர். ஆனால் தினந்தோறும் உழைத்தால்தான் தங்களுக்கு உணவு கிடைக்கும் என இருக்கும் ஏழை மக்கள் அரசு பள்ளியில் படிக்கும் தங்களின் பிள்ளைகளுக்கு காலணி எங்கு வாங்கி தரப் போகிறார்கள்.
எனவே கோடை காலம் தொடங்க உள்ள நிலையில் சுட்டெரிக்கும் வெயிலில் காலில் செருப்பின்றி பள்ளி மாணவர்கள் நடந்து செல்வதை தவிர்க்க ஏற்கெனவே தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச காலணி வழங்கும் திட்டத்தை அரசு மீண்டும் செயல்படுத்த முன் வர வேண்டும். அப்போதுதான் ஏழை மாணவர்கள் தங்கள் கால்களில் தொற்று நோய்களை சுமக்காமல் பள்ளிக்கு சென்று வருவர். இதனால் செருப்பு வாங்கி அணியக்கூட வசதியற்ற ஏழை மாணவர்களுக்கு மீண்டும் செருப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.