தமிழ்நாடு

முன்னோடியாகத் திகழும் "ராஜஸ்தான்' விதைப் பண்ணைகள்: தமிழகத்திலும் அமைக்கலாமே!

சிதம்பரம்,மே 5: கடந்த பல ஆண்டுகளாக உணவுப் பாதுகாப்பில் சமுதாய விதைப் பண்ணைகள் (community seed banks) பற்றிய விவாதங்கள் விவசாயத் துறையில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. நமது பாரம்பரிய விதைகளை பாதுகாக

ஜி. சுந்தர் ராஜன்

சிதம்பரம்,மே 5: கடந்த பல ஆண்டுகளாக உணவுப் பாதுகாப்பில் சமுதாய விதைப் பண்ணைகள் (community seed banks) பற்றிய விவாதங்கள் விவசாயத் துறையில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

நமது பாரம்பரிய விதைகளை பாதுகாக்கவும், குறைந்த செலவில் விவசாய உற்பத்தியை தொடர்ந்து மேற்கொள்ளவும் ராஜஸ்தான் மாநிலத்தில் சமுதாய விதைப் பண்ணைகளை கிராமப் புறங்களில் அமைக்கும் பணியை பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கிராம அளவில் விவசாயிகளை, சுய உதவிக்குழுக்களை பண்ணை மகளிரை ஒன்றுபடுத்தி அதிகளவில் செய்து வருகின்றன.

நமது தமிழக விவசாயிகளும் அதனைப் பின்பற்றி சமுதாய விதைப்பண்ணைகளை அமைத்து அதிக லாபம் பெறலாம்.

சமுதாய விதைப் பண்ணை செயல்பாடுகளும், சிறப்புகளும்: ராஜஸ்தான் மாநில கடுமையான இயற்கைச் சீற்றங்களால் தொடர்ச்சியாக பாதிக்கப்படுவது வாடிக்கை. இதனால் சிறு மற்றும் குறு விவசாயிகள் அதிகளவு பொருளாதார பாதிப்புகளை சந்தித்து வந்தனர். ÷கடுமையான வறட்சி காலங்களில் தங்களின் விதைகளை கூட உணவிற்காக பயன்படுத்தும் சூழல் காணப்பட்டது. பின்னர் அடுத்த பருவத்துக்கு தனியார் கடைகளில், இடைத்தரகர்களிடம் அதிக விலை கொடுத்து விதைகளை வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டன.

பல பாரம்பரிய விதைகளை இழந்தனர். அத்தகைய நடைமுறை சூழலில் சமுதாய விதைப் பண்ணைகளை முன்னோடி விவசாயிகள் தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் அமைத்தனர். ÷இந்த சமுதாய விதைப் பண்ணையில் விவசாயிகள் பாரம்பரிய முறையில் எளிய கிராமப் புற தொழில்நுட்பங்கள் கொண்டு பெரிய அளவில் சமுதாய விதை வங்கி கலன்களை அனைவரும் சேர்ந்து பொது இடத்தில் அமைத்தனர்.

ஒருஅடி உயரத்துக்கு மேடை போன்ற அமைப்பின் மேல் மூங்கில் கூடைகள் போன்று நெருக்கி பின்னப்பட்டு பெரிய அளவிலான சேமிப்பு கலன்கள் (storage bins) அமைக்கப்பட்டது.

இவ்வாறு அமைக்கப்பட்ட சமுதாய விதை சேமிப்பு மையங்களின் பணிகளை மேற்கொள்ள சில தேர்வு செய்யப்பட்ட விவசாயிகள், பண்ணை மகளிர், மற்றும் சுயஉதவிக் குழுக்களுக்கு தொடர்ச்சியாக பயிற்சிகள் வழங்கப்பட்டன.

இப்புதிய சேமிப்பு முறையில் எதிர்கால விவசாய பணிகளை தொடர்ச்சியாக மேற்கொள்ள நல்ல தரமான விதைகளை விவசாயிகள் கொண்டு வந்ததை சமுதாய விதைப்பண்ணையின் முன்னோடி விவசாயிகள், அதிக விவசாய அனுபவம் கொண்ட பாரம்பரிய விவசாயிகளை கொண்ட வல்லுநர் குழு ஆய்வு செய்து, அவர்களின் பரிந்துரையை பெற்ற பின்பு மட்டுமே சேமிக்கப்படும்.

இவ்வாறு சேமிக்கப்படும் விதைகளில் அளவு, விவசாயிகளின் பெயர் அல்லது கூட்டுக் குடும்பப் பெயருக்கு வரவு வைக்கப்படும். சமுதாய விதைப் பண்ணையில் விவசாயிகளின் விதை சேகரிப்பு மற்றும் வழங்கல் பணியை மேற்கொள்ளவும் ஒரு தனியான தேர்வு செய்யப்பட்ட விவசாயக் குழு உண்டு.

அடுத்தப்படியாக இவ்வாறு சேகரிக்கப்பட்ட விதைகளை இயற்கை பாரம்பரிய பூச்சிக்கொல்லிகளான வேம்பு, நொச்சி இலைகளுடன் கலந்து தொடர்ச்சியாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.

விலை நிர்ணயம்

பிற கிராம விவசாயிகளின் தேவை மற்றும் வேளாண் விதை இடுபொருள் சந்தையின் தேவையை கருத்தில் கொண்டு விதைகள் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அடுத்த பருவத்துக்கு தேவையான விதைகளை விவசாயிகள் சமுதாய விதை பண்ணைகளில் குறைந்த விலையில் வாங்கிய பயன்படுத்தலாம், சமுதாய விதைப்பணைகள் அமைக்கப்பட்ட கிராமத்தில் உறுப்பினர்களாக உள்ள விவசாயிகளின் விதை பங்களிப்பு மற்றும் நிலத்தின் அளவை அடிப்படையாக கொண்டு சங்க உறுப்பினர்களுக்கு இலவசமாக விதைகளை பாதுகாத்து தருகின்றனர்.

மறுசுழற்சி (ஸ்ரீழ்ர்ல் ழ்ர்ற்ஹற்ண்ர்ய்) செய்ய விரும்பும் விவசாயிகளுக்கு அவர்களின் தேவையை கருத்தில் கொண்டு சமுதாய விதைப் பண்ணைகள் வாயிலாக விதைகள் வழங்கப்படுகிறது. சமுதாய விதைப்பண்ணைகள் தனித்தனியாக பாரம்பரிய ரகங்களுக்கு ஏற்பவும், உணவு ÷தானியங்கள், சிறு மற்றும் குறு தானியங்கள், கால்நடை தீவனங்களின் விதைகளுக்கு என்று தனித்தனியாக கிராமத்தில் விவசாயிகளின் தேவை, இடுப்பொருள்கள் சந்தை தேவையை கருத்தில் கொண்டு பல பெரிய அளவில் அதிக எண்ணிக்கையில் சமுதாய விதைப் பண்ணைகள் அமைத்து விவசாய சாகுபடி பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

பிற பயன்கள்: சமுதாய விதைப் பண்ணைகள் வாயிலாக சிறு மற்றும் குறு விவசாயிகள் குறைந்த செலவில் விதைகளை பாதுகாத்து அடுத்த பருவத்தில் விவசாயப் பணிகளை தொடர்ச்சியாக மேற்கொள்ள முடிகிறது.

பல பாரம்பரிய உணவு தானியங்கள், சிறு தானியங்கள் கால்நடை தீவன ரகங்கள் அழிந்து விடாமல் பாதுகாக்க முடிகிறது. இப்பண்ணைகள் அமைப்பு வாயிலாக விதை வணிகத்தில் ஈடுபட்ட முன்னோடி விவசாய சங்கங்கள், சுயஉதவிக் குழுக்கள் பொருளாதார மேம்பாடு அடைய முடிகிறது.

பன்னாட்டு நிறுவனங்களிடம் அதிக விலை கொடுத்து விதைகள் வாங்கி வேண்டிய சூழ்நிலையை தடுப்பதுடன், விவசாய உற்பத்தியை, உற்பத்தி திறனை பாதுகாப்பதுடன் குறைந்த முதலீட்டில் விவசாயிகள் ஈடுபட்டு அதிக மகசூல் பெற உதவுகிறது.

ஒரு முறை பயன்படுத்தினால் அழிந்துவிடும் மரபணு விதைகளுக்கு மாற்றாக உள்ள நமது பாரம்பரிய இயற்கை செல்வங்களை பாதுகாக்கவும், குறைந்த செலவில் விவசாயி பணிகளை தொடர்ச்சியாக மேற்கொள்ளவும் இப்பண்ணைகள் பெரிதும் உதவுகின்றன.

எனவே குறைந்த செலவில் தொடர்ச்சியாக இயற்கை சீற்றங்களை தாண்டி விவசாயப் பணிகளை மேற்கொள்ளவும், பன்னாட்டு உயர் ரக விதைகள் மற்றும் மரபணு விதைகளுக்கு நல்ல மாற்றாக உள்ள நமது பாரம்பரிய விதைகளைப் பாதுகாக்க ராஜஸ்தான் மாநில விவசாயிகள் போல் தமிழக விவசாயிகள் மகளிர் சுய உதவிக்குழுக்கள் ஈடுபட்டால் அதிக லாபம், மகசூல் பெறுவதுடன் விதை வணிகள் வாயிலாக கிராமப்புற வளர்ச்சி மற்றும் பொருளாதார மேம்பாடு அடைய முடியும் என்பதில் சந்தேகம் இல்லை என்கிறார் அண்ணாமலைப் பல்கலை. வேளாண் விரிவாக்கத்துறை விரிவுரையாளர் தி.ராஜ்பிரவின்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

50 நிமிஷத்தில் கோப்பை வென்ற அல்கராஸ்..! 2026ல் அனைத்து போட்டிகளிலும் வெற்றி!

மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா! மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!!

பஞ்சாப்: இரண்டு போலீஸார் சடலங்களாக கண்டெடுப்பு

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

SCROLL FOR NEXT