தமிழ்நாடு

கர்ப்பிணிகளை அலைக்கழிக்கும் மகப்பேறு நிதி உதவி திட்டம்

பொன்னேரி,அக். 18: கர்ப்பிணிகளுக்கு அரசு வழங்கும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவிக்கான காசோலையை வங்கியில் செலுத்தி அப்பணத்தை பெற முடியாமல் கிராம பகுதிகளில் வசிக்கும் மக்க

ம.சுந்​த​ர​மூ​ர்த்தி

பொன்னேரி,அக். 18: கர்ப்பிணிகளுக்கு அரசு வழங்கும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவிக்கான காசோலையை வங்கியில் செலுத்தி அப்பணத்தை பெற முடியாமல் கிராம பகுதிகளில் வசிக்கும் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

 தமிழகம் முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் செவிலியர்கள் அவர்களுக்கு பணி அளிக்கப்பட்ட பகுதிகளில் கர்ப்பிணி பெண்களை அடையாளம் கண்டு கருவுற்றது முதல் அவர்களுக்கு உரிய மருத்துவ ஆலோசனைகள் மற்றும் மருந்து மாத்திரைகளை வழங்கி, அவர்களை பிள்ளைபேறு பெறும் வரை கண்காணித்து வருவர்.

 அத்துடன் ஏழ்மை நிலையில் ஆண்டு வருமானம் ரூ.  12 ஆயிரத்துக்குள் இருக்கும் கர்ப்பிணிப் பெண்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு அரசு வழங்கும் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித்தொகை ரூ.  6 ஆயிரம் கிடைக்கச் செய்வர். ÷இந்த உதவித்தொகை கருவுற்ற நிலையில் இருக்கும் பெண்களுக்கு 7-வது மாதத்தில் ரூ.  3 ஆயிரமும் அதற்கு அடுத்து குழந்தை பிறந்த பின் 3-வது மாதம் ரூ.  3 ஆயிரமும் வழங்கப்பட்டு வருகிறது.

 இந்த உதவித்தொகை தமிழகம் முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் தலைமை மருத்துவர் மூலம் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படுகிறது.

 காசோலையாக வழங்குவதால் சிக்கல்: இந்த உதவித்தொகை குறுக்கு கோடிட்ட காசோலையாக வழங்கப்படுவதால் அதை வங்கியில் அளித்து பணத்தை பெற முடியாமல் பயனாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

 பயனாளியின் பெயரில் அளிக்கப்படும் காசோலையை மாற்ற வேண்டும் எனில் வங்கியில் சேமிப்புக் கணக்கு இருக்க வேண்டும். கிராமப் பகுதியில் ஏழ்மை நிலையில் வசிக்கும் பெரும்பாலான பெண்கள் வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருப்பதில்லை. இதனால் அரசு அளிக்கும் மகப்பேறு நிதி உதவிக்கான காசோலையை மாற்ற வங்கியில் சேமிப்புக் கணக்கு தொடங்க வேண்டிய கட்டாய நிலை அவர்களுக்கு உள்ளது.

 பெயர் மாற்றத்தால் போனது காசோலை பரிமாற்ற வசதி: கிராம பகுதிகளில் வசிக்கும் பெண்கள் தங்கள் பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் சேமிப்புக் கணக்கு தொடங்கி அரசு வழங்கும் மகப்பேறு நிதி உதவி காசோலையை மாற்றி வந்தனர். ÷இந்நிலையில் அந்த கூட்டுறவு வங்கியின் பெயர் கடந்த ஜனவரி மாதம் முதல் "தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கம்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களில் காசோலையை பரிமாற்றம் செய்வதற்கான வசதி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் அரசு அளிக்கும் மகப்பேறு நிதிஉதவி காசோலையை மாற்ற நகரங்களில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கர்ப்பிணி தாய்மார்கள் சேமிப்புக் கணக்கு தொடங்கி பின்னர் காசோலையை அவ்வங்கியில் செலுத்தி பணம் பெறவேண்டிய நிலை உள்ளது.

 வங்கிக் கணக்கு தொடங்குவதில் முட்டுக்கட்டைகள்... தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் புதிதாக சேமிப்புக் கணக்கு தொடங்க ரூ.  1000 செலுத்த வேண்டும். அதன் பின்னர் கணக்கு தொடங்கப்பட்ட பிறகுதான் வங்கியில் காசோலையை அளித்து பணம் பெறமுடியும் என்ற நிலை உள்ளது.

 அத்துடன் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு தொடங்க ஏற்கெனவே வங்கியில் கணக்கு வைத்திருப்பவரின் பரிந்துரை தேவை. மேலும் இவர்களுக்கு கணக்கு துவங்க பரிந்துரை செய்ய நகரங்களில் உள்ள வங்கி வாடிக்கையாளர்கள் சிலர் முன்வருதில்லை. ÷அத்துடன் ஒரு சில தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் இது போன்று தாற்காலிகமாக சேமிப்புக் கணக்கு தொடங்கப்பட்டு அக்கணக்கு அடுத்த சில நாள்களில் முடங்கி விடுவதால் இவர்களுக்கு சேமிப்பு தொடங்க மறுப்பதாக புகார் உள்ளது.

 ஏழை கர்ப்பிணிகள் பயன்பெற கொண்டு வரப்பட்ட டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டம் அவர்களை அவதிப்பட வைக்கும் திட்டமாக மாறும் முன்பு தமிழக முதல்வர் இதில் உள்ள குறைகளை நீக்கி இத்திட்டத்தின் மூலம் அளிக்கப்படும் உதவித்தொகையை இன்முகத்துடன் பெற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

 திட்டங்களை கொண்டு வந்தால் மட்டும் போதாது, அவை எவ்வித சிரமமுமின்றி முறையாக ஏழைகளுக்குப் போய் சேர்ந்தால் மட்டுமே, அந்த திட்டம் வெற்றி அடைந்து "கடந்த 4 ஆண்டுகால திமுக ஆட்சியில்.....’ என மார்த்தட்டிக் கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரா் டிஎஸ். டி சில்வா மறைவு

பெண் மருத்துவா் ஹிஜாப்பை அகற்றிய நிதீஷ் செயலுக்கு வலுக்கும் கண்டனம்

கோவையில் இன்று பிஎஸ்என்எல் ஓய்வூதியா் சங்க அகில இந்திய மாநாடு

சரிவில் முடிந்த பங்குச் சந்தை

வேலூா் தங்கக்கோயிலுக்கு இன்று குடியரசுத் தலைவா் வருகை

SCROLL FOR NEXT