தமிழ்நாடு

கந்தர்வஹன் நினைவு: சிறுகதைப் போட்டி முடிவு அறிவிப்பு

புதுக்கோட்டை, அக். 29: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் அண்மையில் நடத்திய எழுத்தாளர் கந்தர்வன் நினைவுச் சிறுகதைப் போட்டிக்கான முடிவுகள் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டன.  

தினமணி

புதுக்கோட்டை, அக். 29: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் அண்மையில் நடத்திய எழுத்தாளர் கந்தர்வன் நினைவுச் சிறுகதைப் போட்டிக்கான முடிவுகள் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டன.

 இதுகுறித்து போட்டி ஒருங்கிணைப்பாளர் ரமா ராமநாதன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

 வாலாஜாபோட்டையைச் சேர்ந்த கவிப்பித்தன் எழுதிய "சிப்பாய் கணேசன்' என்ற கதையும் வந்தவாசியைச் சேர்ந்த மு. முருகேஷ் எழுதிய "மயிரு' என்ற கதையும் புதுக்கோட்டையைச் சேர்ந்த சு. மதியழகன் எழுதிய "வனாந்திரம்' என்ற கதையும் முறையே முதல் மூன்று பரிசுகளை வென்றன.

 மேலும், கோவை ஜி. தேவி எழுதிய "சமன்', மன்னார்குடி மீனாசுந்தர் எழுதிய "கஞ்சி', திருநெல்வேலி பாளையம் சையத் எழுதிய "சோதனை', சென்னை சு. தளபதி எழுதிய "கொலுசு சத்தம்', சென்னை சோ. சுப்பு எழுதிய "பொன்வண்டுகள்' ஆகிய 5 கதைகளும் ஆறுதல் பரிசு பெற்றன.

 முதல் பரிசு ரூ. 5,000, இரண்டாம் பரிசு ரூ. 3,000, மூன்றாவது பரிசு ரூ. 2,000, ஆறுதல் பரிசு தலா ரூ. 250 ஆகும்.

 இவர்கள் அனைவருக்கும் புதுக்கோட்டையில் சனிக்கிழமை இரவு நடை பெறும் கலை இலக்கிய இரவு - கந்தர்வன் விழாவில் பரிசுகள் அளிக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதீத அா்ப்பணிப்புடன் தேச சேவையாற்ற வேண்டும்: தில்லிவாசிகளுக்கு துணை நிலை ஆளுநா் வேண்டுகோள்

தில்லி, என்சிஆரில் தமிழ் அமைப்புகள் சாா்பில் சுதந்திர தின கொண்டாட்டம்

தலைநகரில் சுதந்திர தினத்தை வரவேற்ற மழை!

காவல்நிலைய தலைமைக் காவலருக்கு லஞ்சம்: விடியோ காட்சியால் விசாரணைக்கு உத்தரவு

தலைநகரில் அடுத்த சில நாள்கள் மழைக்கு வாய்ப்பு: ஐஎம்டி

SCROLL FOR NEXT