முகப்பு
தமிழ்நாடு

இடிந்து விழும் நிலையில் கால்நடை மருந்தகம்

கள்ளக்குறிச்சி, ஜூலை 16: விழுப்புரம் மாவட்டம் அம்மாபேட்டை கால்நடை மருந்தகம் கட்டப்பட்டு 21 ஆண்டுகளிலேயே பாழடைந்துபோய் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இது குறித்து சம்மந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க

Updated On : 28 டிசம்பர், 2023 at 6:11 PM
பகிர்:

கள்ளக்குறிச்சி, ஜூலை 16: விழுப்புரம் மாவட்டம்

அம்மாபேட்டை கால்நடை மருந்தகம் கட்டப்பட்டு 21 ஆண்டுகளிலேயே பாழடைந்துபோய் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இது குறித்து சம்மந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

மேல்தள சிமென்ட் காரைகள் பெயர்ந்து உள்ளே உள்ள கம்பிகள் எலும்புக் கூடுகள் போல் காட்சியளிக்கின்றன.

கள்ளக்குறிச்சியை அடுத்த அம்மாபேட்டையில் 1 ஏக்கர் பரப்பளவில் கால்நடை மருந்தகம் அமைந்துள்ளது.

இந்த மருந்தகம் கடந்த 1.1.75-ல் அப்போதைய பொதுப்பணித் துறை அமைச்சர் பா.உ.சண்முகம் தொடங்கி வைத்தார்.

அக் கட்டடம் பாழடைந்துபோய் விட்டது. பின்னர் மருத்துவமனை கட்டடம் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் கடந்த 1990-ல் கட்டி முடிக்கப்பட்டு தொடங்கிய கட்டடம் ஆகும்.

இக் கால்நடை மருந்தகத்தின் கீழ் வடக்கனந்தல் பேரூராட்சிக்கு உட்பட்ட வடக்கனந்தல், கச்சிராயப்பாளையம், அம்மாபேட்டை, மேட்டுப்பாளையம், வெங்கட்டாம்பேட்டை, அம்மம்பாளையம், மாதவச்சேரி, மன்மலை, பால்ராம்பட்டு, கரடிசித்தூர், செல்லம்பட்டு, எடுத்தவாய்நத்தம், பரிகம், கடத்தூர், எலியத்தூர், தெங்கியாநத்தம், தோப்பூர், குதிரைச்சந்தல், நல்லாத்தூர், மட்டிகைகுறிச்சி, சடையம்பட்டு, காரனூர், நல்லாத்தூர், பைத்தந்துறை, செம்படாக்குறிச்சி, மாத்தூர், அம்மாப்பேட்டை, தாவடிப்பட்டு உள்ளிட்ட 28 கிராமப் பகுதிகளை உள்ளடக்கிய மருந்தகம் ஆகும்.இப்பகுதியில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாயில்லா ஜீவன்கள் இம் மருந்தகத்தை நம்பித்தான் உள்ளன.

இம் மருந்தகத்தில் 1 மருத்துவரும், 1 கால்நடைப் பராமரிம்பு உதவியாளர் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர்.நாள்தோறும் 80-க்கும் மேற்பட்ட ஆடு, மாடு, கோழி மற்றும் அனைத்து விலங்கினங்களுக்கும் சிகிச்சை அளித்து வருகின்றனர்.மருத்துவமனையின் மேல்தளம் சிமென்ட் காரைகள் பெயர்ந்துள்ளதால் மழை பெய்தால் மருத்துவமனை உள்ளே நிற்பதற்கு கூட இடமில்லாமல் குளம்போல் தண்ணீர் தேங்கி நிற்கும்.அலுவலக ஆவணங்கள், உயிர்காக்கும் மருந்துகள் மழையில் நனைந்து விடும்.மருத்துவமனையின் கீழ்தளம் பெயர்ந்து போய் உள்ளது. ஜன்னல்களுக்கு கதவுகள் ஏதும் இல்லாமல் அவல நிலையில் காணப்படுகின்றன.

விஷச் சந்துக்கள் தேள், பூரான், பாம்புகள் அனைத்தும் உள்ளே வந்து அமர்ந்து கொள்ளும். பெயரளவுக்குதான் ஆழ்துளை குழாய் கிணறு நீர்மூழ்கி மோட்டார் காட்சிப் பொருளாக விளங்கி வருகிறது.

மருத்துவமனைக்கு வரும் கால்நடைகளுக்கு தண்ணீர் வைப்பதற்கு தண்ணீரும் இல்லை தொட்டியும் இல்லை.மருத்துவமனை வளாகத்தில் சுற்றுச்சுவர் இல்லாமல் இரவு நேரத்தில் சமூக விரோதிகளின் கூடாரமாக திகழ்ந்து வருகின்றன.

மருத்துவமனையில் ரெப்ரிஜிரேட்டர் பழுதடைந்து போய் துருப்பிடித்த நிலையில்தான் உள்ளன.

உயிர்காக்கும் மருந்துகளை வைப்பதற்கு முடியாமலும் உள்ளனர். ஒரு மாதத்துக்கு 400 மாடுகளுக்கு கருவூட்டல் செய்யப்படுகிறது.

ஒரு மாதத்தில் 1000 ஆடுகளுக்கு குடற்புழு நீக்கி மருந்து அளித்து வருகின்றனர். கிராமங்களுக்கு சென்று விழிப்புணர்வுக் கூட்டம் நடத்தி மலடு நீக்கம் மற்றும் கால்நடை மருத்துவ சிகிச்சை அளித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர்.இது குறித்து பலமுறை மருத்துவ உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளனர். அவர்களும் புதிய கட்டடம் கட்டுவதற்கு ஏற்பாடு செய்வதாகத்தான் சொல்லி வருகின்றனர். ஆனால் செய்தபாடில்லை.

இது குறித்து கள்ளக்குறிச்சி கால்நடை பராமரிப்பு உதவி இயக்குநர் கே.அழகரசனை, தினமணி செய்தியாளர் அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கேட்டபோது, "மேல் அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளேன்.

முழு கட்டுரையைப் படிக்க →