பொன்னேரியில் கன்டெய்னர் லாரிகள் நுழைய தடை விதிக்கப்படுமா?
பொன்னேரி: பொன்னேரியில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க கன்டெய்னர் லாரிகள் செல்வதற்குத் தடை விதிக்க வேண்டும் என்பது அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும். திருவள்ளூர்
தமிழ்நாடுபொன்னேரியில் கன்டெய்னர் லாரிகள் நுழைய தடை விதிக்கப்படுமா?
பொன்னேரி: பொன்னேரியில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க கன்டெய்னர் லாரிகள் செல்வதற்குத் தடை விதிக்க வேண்டும் என்பது அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும். திருவள்ளூர்
பொன்னேரி: பொன்னேரியில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க கன்டெய்னர் லாரிகள் செல்வதற்குத் தடை விதிக்க வேண்டும் என்பது அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி பேரூராட்சியில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
அத்துடன் பொன்னேரியில் கோட்டாட்சியர், வட்டாட்சியர், நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித் துறை, சார்பதிவாளர் அலுவலகம், காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகம், அரசு கரூவூலம், பேரூராட்சி அலுவலகம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.
மேலும் விரைவு நீதிமன்றம் உள்ளிட்ட 5 நீதிமன்றங்கள், சப்ஜெயில், 3 தேசிய வங்கிகள், 3 திரையரங்குகள், தனியார் மற்றும் அரசு கல்லூரிகள், ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள் அமைந்துள்ளன.
மேலும் தாலுகா தலைமை அரசு மருத்துவமனையும் இங்கு இயங்கி வருகிறது. மேல்நிலைப் பள்ளிகள், கல்லூரிகள், அரசு மருத்துவமனை, வட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்டவை பொன்னேரியில் அமைந்துள்ளதால் பொன்னேரியை சுற்றிலும் உள்ள கிராமப் பகுதியில் இருந்து நாள்தோறும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பொன்னேரி வந்து செல்கின்றனர்.
சென்னை துறைமுகம், எண்ணூர் துறைமுகம், வடசென்னை அனல் மின்நிலையம், காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள கப்பல் கட்டும் தளம், கடல் நீரை குடிநீராக்கும் ஆலை, சி.பி.சி.எல். எண்ணெய் நிறுவனம் மற்றும் மணலி, மணலி புதுநகர், கொண்டக்கரை, திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள 100-க்கும் மேற்பட்ட தனியார் கன்டெய்னர் கிடங்குகளுக்கு செல்லும் கனரக (கன்டெய்னர்) வாகனங்கள் பொன்னேரி வழியாக சென்று வருகிறது.
இதன் காரணமாக பொன்னேரியில் உள்ள செங்குன்றம் - பொன்னேரி சாலை, திருவொற்றியூர் - பொன்னேரி சாலை மற்றும் தாயுமான் செட்டி தெரு ஆகிய சாலைகளில் எப்போதும் கனரக வாகனங்களின் போக்குவரத்து நிறைந்து காணப்படும்.
இதன் காரணமாக மேற்கண்ட சாலைகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் காலை நேரங்களில் பள்ளி, கல்லூரி, செல்லும் மாணவர்கள் அவசரமாக வேலைக்கு செல்லும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இச்சாலையில் பகல் நேரங்களில் கனரக வாகனங்களின் போக்குவரத்தை தடை செய்யக் கோரி அப்பகுதி மக்கள் விடுத்துள்ள கோரிக்கை கிணற்றில் போட்ட கல்லாய் கிடக்கிறது. இது குறித்து தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் திருவள்ளூர் மாவட்டச் செயலரும், சமூக நல ஆர்வலருமான ஹரிநாகார்ஜுன் கூறுகையில், "பொன்னேரி வழியாக கனரக வாகனங்கள் சென்று வருவதன் காரணமாக இப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் பள்ளி மாணவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்து உள்ளனர் எனவும், இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் நலன் கருதி கனரக வாகனங்கள் பொன்னேரி வழியாக செல்வதற்குத் தடை விதிக்க திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆசிஷ் சாட்டர்ஜி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.