இருளில் மூழ்கிக் கிடக்கும் மின்வாரிய அலுவலகம் !
பொன்னேரி, செப். 6: பொன்னேரி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் இரவு நேரத்தில் மின்விளக்கின்றி இருளில் மூழ்கி கிடப்பதால் அங்கு சமூக விரோத சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் தெ
பொன்னேரி, செப். 6: பொன்னேரி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் இரவு நேரத்தில் மின்விளக்கின்றி இருளில் மூழ்கி கிடப்பதால் அங்கு சமூக விரோத சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
÷திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரியை அடுத்த வேண்பாக்கத்தில் 2 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது பொன்னேரி துணை மின் நிலையம். இங்கு அமைந்துள்ள துணை மின்நிலைய வளாகத்தில் பொன்னேரி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம், மின் வாரிய ஊழியர்களுக்கான குடியிருப்புகள் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கான மின்வாரிய அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.
÷பொன்னேரி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் அமைந்துள்ள முன்பகுதியில் தடப்பெரும்பாக்கம் கிராம ஊராட்சி சாலையும், பின்புறம் பொன்னேரி திருவொற்றியூர் நெடுஞ்சாலையும் அமைந்துள்ளது.
÷இங்கு அமைந்துள்ள துணை மின் நிலையத்தில் இருந்து பொன்னேரி கிழக்கு, மேற்கு என பிரிக்கப்பட்டு மின்சார வாரியம் மூலம் மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ÷பொன்னேரி நகருக்கே வெளிச்சத்தை அளிக்கும் துணை மின் நிலையத்தை ஒட்டி அமைந்துள்ள கோட்ட செயற்பொறியாளர் அலுவலத்தின் முகப்பில் மின்விளக்கு அமைக்கப்படாததன் காரணமாக இரவு நேரத்தில் அலுவலக வளாகம் முழுவதும் இருளில் மூழ்கிக் கிடப்பதாக அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
÷இதன் காரணமாக அங்கு இரவு நேரத்தில் சமூக விரோத சம்பவங்கள் நடைபெற்று வருவதாகவும் அப்பகுதிவாசிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
÷எனவே பொன்னேரி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலத்தின் முகப்பில் மின் விளக்கு அமைத்து அப்பகுதியில் வெளிச்சம் பரவ மின்வாரிய உயரதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் எதிர்பார்ப்பு.
இருளில் மூழ்கி கிடக்கும் பொன்னேரி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம்.