முகப்பு
தமிழ்நாடு

சொந்த வீட்டுக் கனவை நனவாக்கும் மாபெரும் கண்காட்சி: இன்றே கடைசி; பல்வேறு சலுகைகளுடன் உடனடி வீட்டுக் கடன் வசதி

 சென்னை, ஆக. 25: மக்களின் சொந்த வீட்டுக் கனவை நனவாக்கும் வகையிலான மாபெரும் வீட்டு மனை-அடுக்குமாடிக் குடியிருப்பு கண்காட்சி சென்னையில் சனிக்கிழமை தொடங்கியது.  "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' பத்திரிகை நி

Updated On : 26 செப்டம்பர் 2012, 11:32 am IST
பகிர்:

 சென்னை, ஆக. 25: மக்களின் சொந்த வீட்டுக் கனவை நனவாக்கும் வகையிலான மாபெரும் வீட்டு மனை-அடுக்குமாடிக் குடியிருப்பு கண்காட்சி சென்னையில் சனிக்கிழமை தொடங்கியது.

 "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' பத்திரிகை நிறுவனம், ரெப்கோ வீட்டுக் கடன் நிதி நிறுவனத்துடன் இணைந்து நடத்தும் இந்த இரண்டு நாள் கண்காட்சி சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யு வணிக வளாகத்தில் நடைபெறுகிறது.

 கண்காட்சியை "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' குழுமத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான மனோஜ்குமார் சொந்தாலியா தொடங்கி வைத்தார்.

Advertisement

Advertisement

 தொடக்க விழாவில் ரெப்கோ வீட்டுக் கடன் நிதி நிறுவன நிர்வாக இயக்குநர் ஆர். வரதராஜன் பேசியது:

 கண்காட்சியில் பல முன்னணி வீடு கட்டும் நிறுவனங்கள் பங்கேற்று, அரங்குகளை அமைத்துள்ளன. எனவே, பார்வையாளர்களிடையே இக் கண்காட்சி நல்ல வரவேற்பு பெறும்.

 கண்காட்சியில் ரெப்கோ வீட்டுக் கடன் நிதி நிறுவனத்தின் சார்பிலும் அரங்கு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. கண்காட்சியைப் பார்வையிட வரும் வாடிக்கையாளர்கள் வீட்டுக் கடன் பெற விரும்புவார்களேயானால், அரங்கிலேயே அனைத்து விதமான விவரங்களும் பரிசீலிக்கப்பட்டு கடனுக்கான ஒப்புதலும் அளிக்கப்பட்டுவிடும். இவ்வாறு கண்காட்சி அரங்கிலேயே கடன் ஒப்புதல் பெறுபவர்களுக்கு சிறப்பு சலுகைத் திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளோம்.

 பொதுவாக, ரெப்கோ வீட்டுக் கடன் நிதி நிறுவனத்திடம் வீட்டு கடன் பெறுபவர்களிடம், கடன் தொகையில் 0.75 சதவீத தொகை மதிப்பீட்டுக் கட்டணமாக வசூலிக்கப்படும். கண்காட்சி அரங்கில் கடன் ஒப்புதல் பெறுபவர்களுக்கு இந்த மதிப்பீட்டுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

 சில வங்கிகளும், வீட்டுக் கடன் நிதி நிறுவனங்களும் மாத ஊதியம் பெறுபவர்களுக்கு மட்டுமே வீட்டுக் கடனை வழங்குகின்றன. வழக்குரைஞர்கள், காவல்துறையினர் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு கடன் தர முன்வருவதில்லை.

 ஆனால், ரெப்கோ வீட்டுக் கடன் நிதி நிறுவனம், முறையான பிணையம் மற்றும் கடனை திரும்பச் செலுத்தும் திறன் ஆகிய இரண்டு நிபந்தனைகளுடன், மாத ஊதியம் இல்லாதவர்களுக்கு மட்டும் அல்லாமல் வழக்குரைஞர்கள், காவல்துறையினர் மற்றும் பத்திரிகையாளர்கள் என அனைத்து தரப்பினருக்கும் வீட்டுக் கடனை அளிக்கத் தயாராக இருக்கிறது என்றார்.

 54 அரங்குகள்: கண்காட்சியில் 54 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 90 சதவீத அரங்குகளில் முன்னணி வீடு கட்டும் நிறுவனங்களே இடம்பெற்றுள்ளன. சில அரங்குகளில் மட்டும் வீட்டு உபயோகப் பொருள் நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.

 வசதியான சொகுசு வீடுகள் வாங்க விரும்புபவர்கள் முதல் நடுத்தரப் பிரிவினரும் பயன் பெறும் வகையில் அமைந்துள்ள இந்தக் கண்காட்சிக்கு அனுமதி இலவசம்.

 எந்தெந்த நிறுவனங்கள்? சவுத் இந்தியா ஷெல்டர்ஸ் தனியார் நிறுவனம், ஸ்ரீராம் வீடு கட்டும் நிறுவனம், நியூரி வீடு கட்டும் நிறுவனம், அக்ஷயா, விஜய் சாந்தி, வினோத் வீடு கட்டும் நிறுவனம், யுகா வீடு நிறுவனம், இடிஏ ஸ்டார் டெக் சிட்டி தனியார் நிறுவனம், விஜிபி வீடு நிறுவனம், அருண் எஸ்ùஸல்லோ நிறுவனம், மருதம் குழுமம், டிரஸ்ட் வீடு நிறுவனம், எஸ்.வி.பி. வீடு மேம்பாட்டு நிறுவனம், வி.ஜே.எஸ். அúஸôசியேசன், சாலார்புரியா சட்வா குழுமம் என 50-க்கும் மேற்பட்ட முன்னணி வீடு கட்டும் நிறுவனங்கள் கண்காட்சியில் அரங்குகளை அமைத்துள்ளன.

 இந்த நிறுவனங்களும் அரங்கிலேயே வீடு வாங்க பதிவு செய்பவர்களுக்கு பல்வேறு சலுகைத் திட்டங்களை அறிவித்துள்ளன.

 ரூ. 17 லட்சம் முதல் ரூ. 3 கோடி வரை....இந்த நிறுவனங்கள் சென்னையிலும், சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ரூ. 17 லட்சம் முதல் ரூ. 3 கோடி வரையிலான அடுக்குமாடி மற்றும் வரிசை வீடுகளை அமைத்து வருகின்றன.

 யுகா வீடு கட்டும் நிறுவனம் சென்னையை அடுத்த தையூரில் (கேளம்பாக்கம் அருகில்) அனைத்து வசதிகளுடன்கூடிய அடுக்குமாடி குடியிருப்பை அமைத்து வருகிறது. இந்த குடியிருப்புகளின் ஆரம்ப விலை ரூ. 17 லட்சமாகும். இதுபோல் சென்னை கோயம்பேட்டில் ரயில் நகருக்கு அருகில் சொகுசு அடுக்குமாடி குடியிருப்பையும் அமைத்து வருகிறது. சவுத் இந்தியா ஷெல்டர்ஸ் நிறுவனம் சென்னை ஊரப்பாக்கத்திலும், திருச்சி எடமலைப்பட்டி புதூரிலும் அடுக்குமாடி சொகுசு வீடுகளை அமைத்து வருகிறது. இந்த குடியிருப்புகளின் விலை சதுர அடி ரூ. 3,300 ஆகும்.

 விஜய் ஷாந்தி நிறுவனம் சென்னை புரசைவாக்கம், கேளம்பாக்கம், பெருங்குடி, கீழ்ப்பாக்கம் ஆகிய இடங்களில் அனைத்து வசதிகளுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்புகளை அமைத்து வருகிறது. இந்த குடியிருப்புகளின் ஆரம்ப விலை சதுர அடி ரூ. 3,200 முதல் ரூ. 15,500 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

 அக்ஷயா நிறுவனம் சென்னை ராஜீவ்காந்தி சாலையில் ரூ. 18.74 லட்சம் முதல் ரூ. 47.77 லட்சம் வரையிலான ஒரு படுக்கையறை, இரண்டு படுக்கையறை மற்றும் மூன்று படுக்கையறைகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளை அமைத்து வருகிறது. விஜிபி வீடு நிறுவனம் ஸ்ரீபெரும்புதூரில் அடுக்குமாடி குடியிருப்பை அமைத்து வருகிறது. நியூரி வீடு கட்டும் நிறுவனம் அண்ணாநகர் மேற்கில் விளையாட்டு மையம், உடற்பயிற்சி கூடம், நிகழ்ச்சிகளுக்கான அரங்கு என அனைத்து வசதிகளுடன் கூடிய சொகுசு அடுக்குமாடி குடியிருப்பை அமைத்து வருகிறது.

 அருண் எக்ùஸல்லோ நிறுவனம் நடுத்தர பிரிவினர் வாங்கக் கூடிய வகையில் சென்னையை அடுத்த ஒரகடத்தில் தொடக்க விலை ரூ. 17 லட்சம் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளை அமைத்து வருகிறது.

 இதுபோல் கண்காட்சியில் பங்கேற்றுள்ள பல்வேறு நிறுவனங்கள் சென்னை அம்பத்தூர், தாம்பரம், ஊரப்பாக்கம், வண்டலூர் மண்ணிவாக்கம், காஞ்சிபுரம் என பல்வேறு பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகளை அமைத்து வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.