ஸ்ரீவில்லிபுத்தூர் செவிலியர் கல்லூரியில் உறுதிமொழி எடுக்கும் விழா
விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவிலில் உள்ள வி.பி.எம்.எம். மகளிர் செவிலியர் கல்லூரியின் முதல் அணி மாணவிகள் விளக்கேற்றி, உறுதிமொழி எடுக்கும் விழா கல்லூரி கலையரங்கில் கல்வி நிறுவனங்களில் தலைவர் டாக்டர் வி.பி.எம்.சங்கர் தலைமையில் நடைபெற்றது. வி.பி.எம்.எம். மகளிர் கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் வி.பி.எம்.சங்கர் சிறப்பு
நோயாளிகளை பராமரித்தல், செயலில் கவனம், மருத்துவமனை மேலாண்மை என்பவற்றை கடைப்பித்தால், செவிலியர் மாணவிகள் அனைவரும், அனைத்து தாதியருக்கும் முன்னுதாரனமாகத் திகழலாம் என்று வி.பி.எம்.எம். மகளிர் கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் வி.பி.எம்.சங்கர் கூறினார்.
விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவிலில் உள்ள வி.பி.எம்.எம். மகளிர் செவிலியர் கல்லூரியின் முதல் அணி மாணவிகள் விளக்கேற்றி, உறுதிமொழி எடுக்கும் விழா கல்லூரி கலையரங்கில் கல்வி நிறுவனங்களில் தலைவர் டாக்டர் வி.பி.எம்.சங்கர் தலைமையில் நடைபெற்றது. வி.பி.எம்.எம். மகளிர் கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் வி.பி.எம்.சங்கர் சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில் கூறியதாவது:
நவீன தாதியியல் முறையை உருவாக்கிய இங்கிலாந்து நாட்டு தாதி பிளாரன்ஸ் நைட்டிங்கேல், போரில் காயம் அடைந்த வீரர்களுக்கு ஓய்வின்றி மருந்திட்டார். தாதிகளுக்கான பயிற்சிப் பள்ளியையும் முதலில் தொடங்கிய இவர், ஒரு எழுத்தாளர் மற்றும் புள்ளியியலாளரும் ஆவார்.1854-56 ல் ரஷ்ய பேரரசிற்கும், பிரான்ஸ் படைக் கூட்டணிக்கும் நடைபெற்ற கிரிமியன் போரில் இவர் ஆற்றிய சேவையை உலகம் இன்றும், என்றும் நினைவு கூறும். இவர், இவரது சித்தி உள்பட இவரால் பயிற்றுவிக்கப்பட்ட 38 பேர் போர்முனைக்குச் சென்று காயமுற்ற போர் வீரர்களுக்கு ஓய்வின்றி மருந்திட்டனர்.
Advertisement
அங்கு போரில் காயம் அடைந்து உயிரிழந்தவர்களைவிட 10 மடங்கு பேர் காலரா, டைபாய்டு உள்ளிட்ட நோய் தொற்றினால் உயிரிழப்பு ஆவதை அறிந்து, குறைபாடுள்ள கழிவு நீர் பாதையை இவரே சுத்தம் செய்தார். இடநெருக்கடியை போக்கி காற்றோட்டத்தை ஏற்படுத்தி சுகாதாரத்தை நிலைநாட்டி நோய்த் தொற்றை தடுக்க நடவடிக்கை எடுததார். செவிலியருக்கு முன்னுதாரமாக திகழும் பிளாரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்தநாளான மே 12-ம் தேதி உலக செவிலியர் தினம் கொண்டாடப்படுகிறது. செவிலியர் பயிற்சியில் சேர்ந்துள்ள மாணவிகள், இந்தப் பணி இறைவனுக்குச் செய்யும் பணி என்று எண்ணி செய்ய வேண்டும் என்றார் அவர்.
ஆங்கிலத் துறைத் தலைவர் சங்கிலிக்காளை, மூத்த வழக்குரைஞர் வி.எஸ்.கந்தசாமி உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கினர். விழாவில் ஏராளமான பெற்றோர் கலந்து கொண்டனர்.உதவி பேராசிரியை எம்.சுதா நன்றி கூறினார்.