தமிழ்நாடு

தியாகி கக்கன் பிறந்தநாள் விழா

மேலூர், ஜூன் 18: சுதந்திரப் போராட்ட தியாகி கக்கனின் 104-வது பிறந்தநாளையொட்டி, மேலூர் அருகே தும்பைப்பட்டியில் உள்ள மணிமண்டபத்தில், அவரது உருவச் சிலைக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா திங்கள்கிழம

தினமணி

மேலூர், ஜூன் 18: சுதந்திரப் போராட்ட தியாகி கக்கனின் 104-வது பிறந்தநாளையொட்டி, மேலூர் அருகே தும்பைப்பட்டியில் உள்ள மணிமண்டபத்தில், அவரது உருவச் சிலைக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

 எம்.எல்.ஏ.க்கள் மேலூர்- ஆர். சாமி, மதுரை கிழக்கு- கே.தமிழரசன், சோழவந்தான்- எம்.வி. கருப்பையா, மதுரை மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் ஜபார், மேலூர் நகர்மன்றத் தலைவர் செ. சரவணன், வட்டாட்சியர் முருகானந்தம், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் எஸ். அம்பலம் மற்றும் கக்கனின் சகோதரர் வடிவேலு, பூபதி கக்கன் மற்றும் கக்கனின் உறவினர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

 மதுரை-மேலூர் சாலையில் உள்ள தியாகி கக்கனின் உருவச் சிலைக்கு மதுரை நகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தெய்வநாயகம், கே.எஸ்.கே. ராஜேந்திரன், முன்னாள் எம்.பி. ஏ.ஜி.எஸ். ராம்பாபு உள்ளிட்ட பலர் மாலை அணிவித்தனர். மேலும், தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர், அமைப்பினர் கக்கனின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுகவை வீழ்த்த அதிமுக கூட்டணியில் தவெக இணைய வேண்டும்: வேலூா் இப்ராஹிம்

‘யாசகம்’ இகழ்ச்சி அல்ல!

அந்தியூரில் ரூ.3.44 லட்சத்துக்கு விளைபொருள்கள் ஏலம்

முன்னாள் ஆட்சியா் எழுதிய நூல்கள் வெளியீடு

செங்கோட்டையன் வகுக்கும் பாதையில் விஜய் பயணிப்பாா்: ஆனந்த்

SCROLL FOR NEXT