முகப்பு
தமிழ்நாடு

சர்வீஸ் சாலையில் பள்ளங்கள்

ஸ்ரீபெரும்புதூர், ஜூன் 20: சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலைகளில் உள்ள பள்ளங்களால் இரு சக்கர வாகனங்கள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தப் பள்ளங்களை மூட நெடுஞ்சாலைத்துறையின

Updated On : 2 ஜனவரி, 2024 at 5:48 PM
பகிர்:

ஸ்ரீபெரும்புதூர், ஜூன் 20: சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலைகளில் உள்ள பள்ளங்களால் இரு சக்கர வாகனங்கள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தப் பள்ளங்களை மூட நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும் போது, அவற்றில் இரு சக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் விபத்துகளில் சிக்காமல் இருப்பதற்காக நகர் பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலைகளுக்கு அருகில் சர்வீஸ் சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

மேலும் தொலைதூரப் பயணம் மேற்கொள்ளும் கனரக வாகன ஓட்டுனர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்தி விட்டு ஓய்வு எடுப்பதற்கும் சர்வீஸ் சாலைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இதேபோல் சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்ட போது

ஸ்ரீபெரும்புதூர் பகுதியிலும் சர்வீஸ் சாலைகள் அமைக்கப்பட்டன. இந்த சர்வீஸ் சாலையின் அருகிலேயே மழைநீர் வடிகால்களும் அமைக்கப்பட்டன. இவை சிமென்ட் சிலாப்புகள் மூலம் மூடி வைக்கப்பட்டுள்ளன. தொலைதூர பயணம் மேற்கொள்ளும் கனரக வாகனங்களின் ஓட்டுனர்கள் தாங்கள் ஓய்வெடுப்பதற்காக வாகனங்களை இந்த சர்வீஸ் சாலைகளில் நிறுத்துகின்றனர். இப்படி நிறுத்தப்படும் லாரிகளால் சர்வீஸ் சாலைகளின் அருகில் உள்ள மழைநீர் வடிகால்களின் மீது மூடப்பட்டுள்ள சிமென்ட் சிலாப்புகள் உடைந்துள்ளன.

ராஜீவ் காந்தி நினைவிடம் அருகே உள்ள ஆர்ச் அருகிலும், அரசு மருத்துவமனைக்கு எதிரிலும் வடிகால்களில் பெரும் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது.

இதனால் இரு சக்கர வாகனகங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த பள்ளங்களை மூட நெடுஞ்சாலைத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →