தமிழ்நாடு

மல்லிகை பூ கிலோ ரூ.1,200

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் பூ மார்க்கெட்டில்  மல்லிகைப்

தினமணி

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் பூ மார்க்கெட்டில்  மல்லிகைப் பூ கிலோ ரூ.1,200-க்கு விற்பனையானது. இதேபோல, மற்ற பூக்களின் விலையும் பல மடங்கு உயர்ந்துள்ளது.

பரமத்தி வேலூர், சுற்று வட்டாரப் பகுதிகளான கொளக்காட்டுப்புதூர்,பாலப்பட்டி, எல்லைமேடு,பரமத்தி மற்றும் கரூர் மாவட்டத்தில் பல ஏக்கரில் மல்லிகை, சம்மங்கி, முல்லைப் பூ உள்ளிட்டவை சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.இங்கு விளையும் பூக்கள் அனைத்தும் பரமத்தி வேலூர் பூ ஏல மார்க்கெட்டிற்குக் கொண்டு வரப்பட்டு ஏலம் விடப்படுகிறது.

திங்கட்கிழமை நடைபெற்ற ஏலத்தில் மல்லிகைப் பூ கிலோ ரூ.1,000 முதல் ரூ.1,200 வரை ஏலம் போனது. முல்லைப் பூ ரூ.500 முதல் ரூ.800,,பெங்களூர் மல்லி ரூ.500 முதல் ரூ.600, அரளி ரூ.180, செவந்திப் பூ ரூ.140, சம்மங்கி ரூ.120-க்கும்  ஏலம் போனது. கோழிக்கொண்டை கட்டு ஒன்று ரூ.30 முதல் ரூ.50 வரையிலும் விற்க்கப்பட்டது.

கடந்த சில மாதங்களாக நடைபெற்ற ஏலத்தில் பூக்களின் விலை இந்த அளவுக்கு உயர்ந்ததில்லை. இப்போதுதான் பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால்,  விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த தொடர் மழை, பூக்களின் வரத்து குறைவு,  தீபாவளி பண்டிகை உள்ளிட்ட காரணங்களால் பூக்களின் விலை உயர்ந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார பலன்கள் - தனுசு

வார பலன்கள் - விருச்சிகம்

வார பலன்கள் - துலாம்

சென்னையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! 14.25 லட்சம் பேர் நீக்கம்! சேர்க்க முடியுமா?

வார பலன்கள் - கன்னி

SCROLL FOR NEXT