முகப்பு
தமிழ்நாடு

காவிரி நீர் இல்லாததால் நேரடி நெல் விதைப்பில் ஈடுபடும் விவசாயிகள்

சிதம்பரம், செப்.3: போதிய நீர் இல்லாததால் காவிரி டெல்டா கடைமடை பகுதியான சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தாலுகாக்களில் பெரும்பாலான விவசாயிகள் தற்போது நேரடி நெல் விதைப்பில் ஈடுபட்டுள்ளனர். 30 நாட்களுக்குள

Updated On : 2 ஜனவரி, 2024 at 6:45 PM
பகிர்:

சிதம்பரம், செப்.3: போதிய நீர் இல்லாததால் காவிரி டெல்டா கடைமடை பகுதியான சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தாலுகாக்களில் பெரும்பாலான விவசாயிகள் தற்போது நேரடி நெல் விதைப்பில் ஈடுபட்டுள்ளனர். 30 நாட்களுக்குள் மழை பெய்து தண்ணீர் வந்தால்தான் இந்த விதைகள் கருகாமல் இருக்கும் என விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனர்.

÷காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் படி தமிழகத்திற்கு உரிய நீரைத் தர கர்நாடக அரசு மறுத்துவிட்டது. இதனால் மேட்டூர் நீர் மட்டம் குறைவாக உள்ளதால் சம்பா சாகுபடிக்கு நீர் திறந்து விடப்படவில்லை.

÷தமிழகத்தில் மழையும் பொய்த்து விட்டதால் சம்பா சாகுபடி மேற்கொள்ள உள்ள விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர். குறிப்பாகக் கடலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு தானே புயலால் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டு விவசாயிகள் பெருத்த நஷ்டமடைந்தனர். ÷இந்த ஆண்டு போதிய நீரின்றி குறுவை சாகுபடி மேற்கொள்ளவில்லை. தற்போது மேட்டூரில் இருந்து நீர் திறந்து விட காலதாமதம் ஆவதால் சம்பா சாகுபடியும் கேள்விக்குறியாகி உள்ளது.

Advertisement

÷இந்நிலையில் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள திருநாரையூர், சர்வராஜன்பேட்டை, சிறகிழந்தநல்லூர், எடையார், ராதாம்பூர், எள்ளேரி, வீரநத்தம், நெடும்பூர், உடையூர் உள்ளிட்ட கிராமங்களில் 50 சதவீத விவசாயிகள் நேரடி நெல் விதைப்பில் இறங்கியுள்ளனர். போர்வெல் உள்ளவர்கள் மட்டும் நாற்றாங்கல் நடவுப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

÷இது குறித்து கொள்ளிடம் கீழணை பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் பி.விநாயகமூர்த்தி தெரிவித்தது:

÷நேரடி நெல் விதைப்பு மூலம் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு விதை நெல் ரூ.900-மும், உழவு கூலி ரூ.2,500, ஆள் கூலி உள்பட ரூ.4ஆயிரம் செலவாகிறது. தமிழக முதல்வர் அறிவித்துள்ள சிறப்பு தொகுப்புத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு டிராக்டர் செலவு ரூ.250 வழங்க உத்தரவிட்டுள்ளது.

÷அதுவும் குறிப்பிட்ட அளவு விவசாயிகளுக்கு மட்டும் வழங்க உத்திரவிட்டுள்ளது. நேரடி நெல் விதைப்பு முறையில் 4 முறை டிராக்டர் ஓட்ட ரூ.3600 செலவாகிறது. எனவே விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.2 ஆயிரம் உழவுக் கூலி வழங்க வேண்டும். அதுபோன்று டி.ஏ.பி. ரசாயன உரத்தின் விலை தற்போது 3 மடங்கு உயர்ந்துள்ளது.

÷எனவே ஏக்கருக்கு 2 மூட்டை ரசாயன உரம் அரசு வழங்க வேண்டும். நேரடி நெல் விதைப்பில் விதைத்த பின்னர் 30 நாட்களுக்கு பின்னர் மழை பெய்தால் அல்லது மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்து விட்டப்பட்டால் தான் விதை கருகாமல் முளைக்கும் வாய்ப்புள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments