முகப்பு
தமிழ்நாடு

நெமி−-மண்ணூர் குண்டும் குழியுமான இணைப்புச் சாலை

ஸ்ரீபெரும்புதூர், செப். 25: பல ஆண்டுகளாகச் சீரமைக்கப்படாமல் உள்ள நெமிலி-மண்ணூர் இணைப்புச் சாலையில் மழையின் காரணமாக பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளங்களால் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் அதிகளவ

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:02 PM
பகிர்:

ஸ்ரீபெரும்புதூர், செப். 25: பல ஆண்டுகளாகச் சீரமைக்கப்படாமல் உள்ள நெமிலி-மண்ணூர் இணைப்புச் சாலையில் மழையின் காரணமாக பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளங்களால் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் அதிகளவில் விபத்துகளில் சிக்கி வருவதாகப் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.  

   ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் இருந்து நெமிலி, மண்ணூர், வளர்புரம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்ல நெமிலி மண்ணூர் இணைப்புச் சாலை பயன்பட்டு வருகிறது.

÷இச்சாலையைப் பயன்படுத்தித்தான் மண்ணூர், நெமிலி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு வந்து செல்கின்றனர். தவிர இச்சாலையில் தொழிற்சாலைகள் சில செயல்பட்டு வருவதால் தொழிற்சாலைகளுக்குச் செல்லும் தொழிலாளர்களும் இச்சாலையை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

÷இந்நிலையில் இச்சாலையில் வாகனப் போக்குவரத்து அதிகரித்தாலும், இதனைப் பல ஆண்டுகளாகப் புதுப்பிக்காததாலும் இச்சாலை முழுவதும் பெரும் பள்ளங்கள் உருவாகி உள்ளன.

÷தற்போது ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த சில நாட்களாக

அவ்வப்போது மழை பெய்து வருவதால் நெமிலி மண்ணூர் இணைப்புச்சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி மரண பள்ளங்கள் நிறைந்த சாலையாகக் காட்சியளிக்கிறது. ÷

     இதனால் இச்சாலையை பயன்படுத்தும் இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் விபத்துகளில் சிக்கி காயமடைகின்றனர்.  மிகவும் பழுதடைந்துள்ள இந்தச் சாலையை உடன் சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் நெடுஞ்சாலைத்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →