முகப்பு
தமிழ்நாடு

கடலூர் மாவட்டத்தில் ரேஷன் பொருள்கள் வழங்குவதில் பல்வேறு குளறுபடிகள்: அவதியில் எழை-எளிய மக்கள்

கடலூர் மாவட்டத்தில் குடிமை பொருள் வழங்கல் துறையில்  பல்வேறு குளறுபடிகள் உள்ளதால், ரேஷன் பொருள்கள் வாங்குவதிலும், உள்தாள் பொருத்துவதிலும்

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:08 AM
பகிர்:

கடலூர் மாவட்டத்தில் குடிமை பொருள் வழங்கல் துறையில்  பல்வேறு குளறுபடிகள் உள்ளதால், ரேஷன் பொருள்கள் வாங்குவதிலும், உள்தாள் பொருத்துவதிலும், தமிழகஅரசு பொங்கல் பரிசு பெறுவதிலும் ஏழை,எளிய மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் 7 தாலுக்காக்களில் மொத்தம் 1371 ரேஷன் கடைகள் உள்ளன. மொத்தம் குடிமைப் பொருள் வட்டாட்சியர் அலுவலக கோப்புபடி 7 லட்சத்து 10 ஆயிரம் ரேஷன் கார்டுகள் உள்ளன. குடிமைப் பொருள் துறை ஆன்லைன் பதிவின் படி 6,75,957 கார்டுகள் உள்ளன. கடந்த 2009 ஆண்டு டிசம்பர் மாதம் எவ்வித விசாரணையின்றி கடலூர் மாவட்டத்தில் சர்க்கரை ரேஷன் கார்டுகள் மொத்தம் 35 ஆயிரம் கார்டுகள் போலி என அப்போதிருந்த மாவட்ட வழங்கல் அலுவலரால் நீக்கம் செய்யப்பட்டது. தற்போது நீக்கம் செய்யப்பட்ட குடும்ப அட்டை தாரர்கள் மீண்டும் புதுப்பிக்க கோரி விண்ணப்பம் அளித்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி தாலுக்காவில் 194 கடைகளும், கடலூர் தாலுக்காவில் 187 கடைகளும், குறிஞ்சிப்பாடி தாலுக்காவில் 139 கடைகளும், சிதம்பரம் தாலுக்காவில் 264 கடைகளும், காட்டுமன்னார்கோயில் தாலுக்காவில் 193 கடைகளும், விருத்தாசலம் தாலுக்காவில் 237 கடைகளும், திட்டக்குடி 157 கடைகளும் உள்ளன. இதில் சிதம்பரம் தாலுக்காவில்தான் அதிகமாக 264 கடைகள் உள்ளன.

தற்போது உள்தாள் வழங்குவதிலும், ரேஷன் பொருள்கள் வழங்குவதிலும் ஆன்லைன் ரிஜிஸ்டர் படி உள்தாள் வழங்கப்பட்டதால், கடலூர் மாவட்டத்தில் குடிமைப் பொருள் வழங்கல் துறை கோப்பு பதிவுபடி உள்ள மீதமுள்ள சுமார் 35 ஆயிரம் ரேஷன் கார்டுகளுக்கு உள்தாள் வழங்கப்படவில்லை. அதுபோன்று தமிழகஅரசின் பொங்கல் பரிசும் வழங்கப்படவில்லை. மேலும் ரேஷன் கடைகளுக்கு குறைந்தளவே மண்ணெண்ணெய், துவரம்பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருள்கள் சப்ளை வழங்கப்படுவதால் பொதுமக்களுக்கு சரியான முறையில் ரேஷன் பொருள்கள் கிடைப்பதில்லை என தெரிவிக்கின்றனர். மேலும் ரேஷன்கடைக்கு வரும் பொருள்களுக்கு அந்ததந்த தாலுக்காவில் உள்ள கூட்டுறவு விற்பனை சங்கம் இறக்குகூலி வழங்க வேண்டும். அச்சங்கத்திற்கு அரசு 100 கிலோ மூட்டைக்கு ரூ.17 மானியம் வழங்குகிறது. ஆனால் இறக்குகூலி தொகையை அச்சங்கம் வழங்குவதில்லை. இதனால் ரேஷன் கடை பணியாளர்கள் ஒரு லோடுக்கு ரூ.ஆயிரம் வரை இறக்குகூலியை வழங்க வேண்டியது உள்ளது என வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர். மேலும் தமிழ்நாடு நுகர்பொருள் வானிபக்கழகத்திலிருந்து ரேஷன் பொருள்கள் அனுப்பும் போது எடை மிஷின் மூலம் சரியான எடை வைத்து பொருள்கள் அனுப்பப்படுவதால்,  பொருள்கள் குறைந்து வருகிறது என பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.தமிழ்நாடு நுகர்பொருள் வானிபக்கழகம் ரேஷன் கடை ஊழியர்களுக்கு சராசரி மாதம் ரூ.28 ஆயிரம் ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால் கூட்டுறவுத்துறை மூலம் பணியாற்றும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு மாதம் ரூ.10ஆயிரம்தான் ஊதியம் வழங்கப்படுகிறது. எனவே கூட்டுறவுத்துறை ரேஷன் கடை பணியாளர்களுக்கு, தமிழ்நாடு நுகர்பொருள் வானிபக்கழக ரேஷன் கடை பணியாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் முறைகேடுகளையும், குளறுபடிகளையும் தவிர்க்க தமிழகத்தில் கைரேகை பதிவு செய்யும் டிஜிட்டல் ரேஷன் கார்டுகளை வழங்க வேண்டும், பொருகளை பாக்கெட்டு மூலம் வழங்க வேண்டும் என ரேஷன் கடை பணியாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.