வருமான வரிக் கணக்கை சரிபார்ப்பதில் இழுபறி
தமிழகத்தில் அரசு ஊழியர்கள் தாக்கல் செய்யும் வருமான வரி தொடர்பான கணக்குகளை விதிகளை மீறி கருவூலத் துறை சரிபார்க்கிறது. அந்தத் துறை ஊழியர்களின் அலட்சியப் போக்கால், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சம்பளம் பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் அரசு ஊழியர்கள் தாக்கல் செய்யும் வருமான வரி தொடர்பான கணக்குகளை விதிகளை மீறி கருவூலத் துறை சரிபார்க்கிறது. அந்தத் துறை ஊழியர்களின் அலட்சியப் போக்கால், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சம்பளம் பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒவ்வொரு ஆண்டும் தங்களது வருமான வரிக் கணக்கை பிப்ரவரியில் தாக்கல் செய்வது வழக்கம்.
இவ்வாறு தாக்கல் செய்யப்படும் கணக்குகளை ஒவ்வொரு துறையிலும் உள்ள சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர் சரிபார்ப்பதே விதியாகும்.
ஆனால், அரசு ஊழியர்கள் தாக்கல் செய்யும் வருமான வரிக் கணக்குகளை மாவட்டங்களில் உள்ள கருவூலத் துறை அலுவலர்கள் சரிபார்க்கின்றனர். இவ்வாறு வருமான வரிக் கணக்கை சரிபார்க்கும் அதிகாரம், கருவூலத் துறை அதிகாரிகளுக்கு இல்லை என்கிறார்கள் அரசு ஊழியர்கள்.
இதுகுறித்து அவர்கள் கூறியது: கருவூலத் துறை அதிகாரிகள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., மற்றும் ஓய்வூதியம் பெறுவோரின் வருமான வரிக் கணக்கை சரிபார்ப்பதற்கு மட்டுமே அதிகாரம் உண்டு. பணியில் உள்ள அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் வருமான வரிக் கணக்கை சம்பளம் வழங்கும் அலுவலர்கள் சரிபார்த்து சான்று வழங்கினாலே போதும்.
ஆனால் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் வருமான வரிக் கணக்கை கருவூலத் துறை அதிகாரிகள் சரிபார்க்கும்போது மிகவும் கால தாமதம் ஏற்படுகிறது.
வருமான வரிக் கணக்கில் அது தவறு, சரியான சான்றுகள் இல்லை என அரசு ஊழியர்களை திருப்பி அனுப்புகிறார்கள். விதிகளை மீறி கருவூலத் துறை அதிகாரிகள் செயல்படுவதால் அரசு ஊழியர்களின் சம்பளப் பட்டியல் நிறுத்தப்பட்டு, அவர்களின் பிப்ரவரி மாத ஊதியம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்கிறார்கள்.
மென்பொருளில் சிக்கல்: கருவூலத் துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் மென்பொருளின் ஸ்ங்ழ்ள்ண்ர்ய் அடிக்கடி மாற்றம் செய்யப்படுவதால் சம்பளப் பட்டியல்கள் தயார் செய்வதில் சிக்கல் ஏற்படுவதாக கூறப்படுகிறது. கருவூலத் துறையில் தற்போது சம்பளப் பட்டியல்களை தயார் செய்வதற்காக 9.0 ஸ்ங்ழ்ள்ண்ர்ய் எனும் பழங்காலத்து மென்பொருளை தேசிய தகவலியல் மையம் தயாரித்துள்ளது.
இந்தப் பழமையான மென்பொருளில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் அதை சரிசெய்வதற்காக 46 உதவி புரோகிராமர்கள் மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் ஒப்பந்த அடிப்படையில் தேசிய தகவலியல் மையம் மூலமாக கருவூலத் துறை நியமித்
துள்ளது.
இவர்களுக்கு போதுமான அளவு பயிற்சி அளிக்கப்படாததால் மென்பொருளில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் இவர்களால் அதனை உடனடியாகச் சீர்படுத்த முடியவில்லை. தலைமையகமான சென்னையில் இருந்து போதிய விவரங்களைக் கேட்ட பிறகே மென்பொருள் பிரச்னைகளைத் தீர்க்க முடிவதாக கருவூலத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கருவூலத் துறை வங்கிப் பணிக்கு ஒப்பானதாகும். பட்டியல்கள் குறித்த விவரங்கள் அடங்கிய கணினிகளை தற்போது நியமிக்கப்பட்டுள்ள தற்காலிக பணியாளர்கள் பயன்படுத்துவதால் அவர்கள் தவறு செய்ய வாய்ப்புள்ளதாகவும், மென்பொருளில் தவறு ஏற்பட்டு அதனால் சம்பளம் உள்ளிட்ட தொகைகளில் தவறுகள் ஏற்பட்டால் அதற்கு கருவூலத் துறை அதிகாரிகளே பொறுப்பாக்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.
எனவே இப்பணியிடங்களில் கருவூலத் துறையில் பணியாற்றும் கம்ப்யூட்டர் படித்த அலுவலர்களை நியமித்து அவர்களுக்கு போதுமான பயிற்சி அளிக்கப்பட்டு அவர்களுக்கு பொறுப்பு நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவிக்
கின்றனர்.
கருவூல கணக்குத் துறை நவீனமாக்கப்படும் அதேசமயம் அந்த மென்பொருள் குறித்து மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு சம்பளம் பெற்று வழங்கும் அலுவலகத்திலும் கருத்துகள் கேட்கப்பட்டு அவர்களால் எழுப்பப்படும் பிரச்னைகளை சரிசெய்தபின்பே அவற்றை பயன்படுத்த வேண்டும் என்றும் மென்பொருளில் அவ்வப்போது மாற்றம் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.