சிதம்பரம் நந்தனார் பள்ளியில் பல்லி விழுந்த உணவு: மாணவர்கள் போராட்டம்: போலீஸார் விசாரணை
சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள சத்துணவுக் கூடத்தில் புதன்கிழமை மதியம் வழங்கப்பட்ட சாம்பார் சாத்தில் பல்லி கிடந்ததால், மாணவர்கள் உணவு சாப்பிட மறுத்த பள்ளி வளாகத்தில்
சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள சத்துணவுக் கூடத்தில் புதன்கிழமை மதியம் வழங்கப்பட்ட சாம்பார் சாத்தில் பல்லி கிடந்ததால், மாணவர்கள் உணவு சாப்பிட மறுத்த பள்ளி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள சத்துணவுக்கூடத்தில் தினமும் சுமார் 250 மாணவர்கள் மதியஉணவு சாப்பிட்டு வருகின்றனர். சத்துணவு கூட்டத்திற்கு பாலுபிள்ளை பொறுப்பாளராகவும், குப்பம்மாள், பாலு ஆகிய இரு சமையர்கள் பணியாற்றுகின்றனர். இந்நிலையில் புதன்கிழமை மதியம் வழங்கப்பட்ட சாம்பார் சாதத்தில் பல்லி கிடந்ததை பார்த்து 10-ம் வகுப்பு மாணவர் ஆசைதம்பி, சமையலர் குப்பம்மாளிடம் கூறியுள்ளார். அவர் பல்லியை எடுத்து போட்டுவிட்டு யாரிடம் கூற வேண்டாம் எனக்கூறிவிட்டு தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பெரும்பாலான மாணவர்கள் உணவு சாப்பிட மறுத்து பள்ளி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த சிதம்பரம் நகர போலீஸார் மற்றும் உதவித் தலைமை ஆசிரியர் மனோகரன் ஆகியோர் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி புதிதாத சமைத்து உணவு வழங்க ஏற்பாடு செய்ததை அடுத்து மாணவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். மேலும் இதுகுறித்து நகர போலீஸார் சத்துணவுக்கூட பொறுப்பாளர் மற்றும் சமையலரிடம் விசாரணை நடத்தினர்.