ஸ்டவ் வெடித்து இளம்பெண் சாவு: சார் ஆட்சியர் விசாரணை
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே வியாழக்கிழமை இரவு ஸ்டவ் வெடித்து இளம்பெண் உயிரிழந்த சம்பவம் குறித்து, சார் ஆட்சியர்
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே வியாழக்கிழமை இரவு ஸ்டவ் வெடித்து இளம்பெண் உயிரிழந்த சம்பவம் குறித்து, சார் ஆட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
வேப்பந்தட்டை அருகே உள்ள என்.புதூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார் மனைவி ரேவதி (23). இவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி கெüதம் (4) என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், வியாழக்கிழமை இரவு ரேவதி பால் காய்ச்சுவதற்காக மண்ணெண்ணை ஸ்டவ்வை பற்ற வைத்தபோது ஸ்டவ் வெடித்ததில் பலத்த காயமைந்த ரேவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து அவரது தாய் சரசு (42) அளித்த புகாரின்பேரில், மங்கலமேடு துணை கண்காணிப்பாளர் கோவிந்தராஜ் வழக்குப் பதிந்து விசாரிக்கிறார். மேலும், திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால் வரதட்சிணை கொடுமையால் ரேவதி தற்கொலை செய்து கொண்டாரா என பெரம்பலூர் சார் ஆட்சியர் ப. மதுசூதன் ரெட்டி விசாரிக்கிறார்.