முகப்பு
தமிழ்நாடு

குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து சட்டங்களிலும் 18-வயது வரை குழந்தைகள் என்று சட்டம் வேண்டும்

குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து சட்டங்களிலும் 18-வயது வரை குழந்தைகள் என்று சட்டம் கொண்டுவர வேண்டும் என்று ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற நானும் குழந்தைதான் என்

தமிழ்நாடு

குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து சட்டங்களிலும் 18-வயது வரை குழந்தைகள் என்று சட்டம் வேண்டும்

குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து சட்டங்களிலும் 18-வயது வரை குழந்தைகள் என்று சட்டம் கொண்டுவர வேண்டும் என்று ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற நானும் குழந்தைதான் என்

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:06 AM
பகிர்:

குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து சட்டங்களிலும் 18-வயது வரை குழந்தைகள் என்று சட்டம் கொண்டுவர வேண்டும் என்று ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற நானும் குழந்தைதான் என்ற மாநிலம் தழுவிய பிரச்சார இயக்கத்தில் வலியுறுத்தப்பட்டது.விருதுநகர் மாவட்ட, சமகல்வி இயக்கம், நீட்ஸ் நிறுவனம் மற்றும் மதுரை லிட்டில்ஸ் அமைப்பு சார்பில் நானும் குழந்தைதான் என்ற மாநிலம் தழுவிய பிரச்சார இயக்கத்தின் கையெழுத்து இயக்கம் மற்றும் கருத்தரங்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்றது.

மாநில குழந்தை உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் செல்ல செல்வக்குமார் கலந்து கொண்டு பேசுகையில் கூறியதாவது: மாநில குழந்தை உரிமை பாதுகாப்பு ஆணையம், மாநிலம் முழுவதும் நடைபெறும் குழந்தைகள் மீதான பல்வேறு வன்முறைகளை தடுத்து நிறுத்தி, குழந்தைகளைப் பாதுகாப்பதில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றார்.

நீட்ஸ் நிறுவன தலைவர் ராஜகோபால் பேசுகையில்: இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் குழந்தைகளின் வயது, சட்டத்திற்கு சட்டம் வேறுபடுகின்றது. வயது வேறுபாட்டால் குழந்தைகள் பல்வேறு பணிகளில் குழந்தைத் தொழிலாளர்களாக பணியமர்த்தப்படுகிறார்கள். பல்வேறு நிலைகளில் இது சட்டத்தினை ஏமாற்ற நினைப்பவர்களுக்கு வாய்ப்பாகின்றது. இந்த நிலையை மாற்றி 0-18 வயது வரை அனைவரும் குழந்தைகள் என்று அனைத்து சட்டங்களிலும் ஒரு மாதிரியான சட்ட திருத்தம் கொண்டுவர வேண்டும் என்றார் அவர்.

முழு கட்டுரையைப் படிக்க →