முகப்பு
தமிழ்நாடு

குழந்தைக்கு முடி காணிக்கை செலுத்த கோயிலுக்கு வந்த இருவர் குளத்தில் மூழ்கி பரிதாபச் சாவு

ஆலங்குடி அருகே குழந்தைக்கு முடி காணிக்கை செலுத்த வந்த குன்னூர் பகுதியைச் சேர்ந்த இருவர்  வியாழக்கிழமை குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:33 AM
பகிர்:

ஆலங்குடி அருகே குழந்தைக்கு முடி காணிக்கை செலுத்த வந்த குன்னூர் பகுதியைச் சேர்ந்த இருவர்  வியாழக்கிழமை குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

குன்னூர் அருகேயுள்ள மணியபுரத்தைச் சேர்ந்தவர் செந்தில்(40).இவரது உறவினரான அன்புராஜா மகன் சதீஷ்(16) என்பவருடன் தனது குழந்தையான நித்திஷ்(2) முடியை காணிக்கை செலுத்துதற்காக ஆலங்குடி அருகேயுள்ள குளமங்களம் கோயிலுக்கு வந்துள்ளார்.அப்போது  வரும் வழியில் அவரது உறவினரான தேனிக்காட்டைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவரது வீட்டிற்கு மூவரும் சென்றுள்ளனர்.

இந்நிலையில் வியாழக்கிழமை காலை செந்தில்,சதீஷ் ஆகிய இருவரும் குருந்தடிமனையில் உள்ள பிள்ளையார் குளத்திற்கு குளிக்க சென்றுள்ளனர். குளத்தில் முதலில் இறங்கிய சதீஷ் ஆழம் அதிகமாக இருந்ததால் மூழ்க தொடங்கியுள்ளார்.இதைக்கண்ட செந்தில் அவரை காப்பாற்ற குளத்தில் குதித்துள்ளார்.குளத்தில் ஆழம் அதிகமாக இருந்ததால் நீச்சல் தெரியாத இருவரும் தண்ணீருக்குள் மூழ்கினர். இருவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஒடிவந்து குளத்தில் குதித்து மூழ்கிய இருவரையும் தேடி மீட்டு வெளியே கொண்டுவந்தனர்.ஆனால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு இருவரும் இறந்துவிட்டனர்.

தகவலறிந்து அங்கு  வந்த  ஆலங்குடி போலீஸார் இரு சடலத்தை மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →