பழனியில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை
பழனி நேதாஜி நகர் முதல் தெருவை சேர்ந்தவர் கருணாகரன் மனைவி வள்ளிநாயகம்(29). இவருக்கு திருமணமாகி பத்து வருடமான நிலையில்
பழனியில் பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
பழனி நேதாஜி நகர் முதல் தெருவை சேர்ந்தவர் கருணாகரன் மனைவி வள்ளிநாயகம்(29). இவருக்கு திருமணமாகி பத்து வருடமான நிலையில் மூன்று வயதில் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. வள்ளிநாயகம் கடந்த சில வருடங்களாக ஆஸ்துமா நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். பல்வேறு இடங்களிலும் சிகிச்சை மேற்கொண்டு பலனில்லாத நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை வீட்டின் மாடியில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகா எஸ்.கே.புத்தூர் நீலாம்பூரை சேர்ந்த வள்ளிநாயகத்தின் தாயார் கமலாத்தாள்(55) கொடுத்த புகாரின் பேரில் பழனி டவுன் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.