தமிழ்நாடு

திருமணத்தடை நீக்க பரிகாரம்: ரூ.30 லட்சம் மோசடி புகார்

திருமணத்தடையை நீக்க பரிகாரம் செய்வதாகக் கூறி ரூ.30 லட்சம் மோசடியிóல் ஈடுபட்டதாக எழுந்த புகார் அடிப்படையில் 3 பேர் மீது வழக்குப்பதிந்த போலீஸார்

ஜெயப்பாண்டி

திருமணத்தடையை நீக்க பரிகாரம் செய்வதாகக் கூறி ரூ.30 லட்சம் மோசடியிóல் ஈடுபட்டதாக எழுந்த புகார் அடிப்படையில் 3 பேர் மீது வழக்குப்பதிந்த போலீஸார் விசாரித்துவருகின்றனர்.

 மதுரை புதூர் அல்-அமீன் நகர் பகுதியைச் சேர்ந்த காஜாநஜ்முதீன் மனைவி இஸ்ரானா. இவரது மகளுக்கு திருமணத் தடையை நீக்க பரிகாரம் செய்வதாகக் கூறி காட்டுமன்னார்கோவிலைச் சேர்ந்த அகமதுபாஷா உள்ளிட்டோர் அணுகியுள்ளனர்.

 அதனடிப்படையில் இஸ்ரானா பல தவணைகளில் ரூ.30 லட்சம் வரை அகமதுபாஷா தரப்பினரிடம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், பரிகாரம் நடைபெறவில்லை என புகார் எழுந்தது. இதையடுத்து ரூ.15 லட்சத்தை திருப்பித் தருவதாகக் கூறி அகமதுபாஷா தரப்பில் ஆவணங்கள் தந்துள்ளனர். அதன்படியும் பணத்தை திருப்பித்தரவில்லையாம்.

 இதனையடுத்து மதுரை முதலாவது நீதித்துறை நடுவர்மன்றத்தில் இஸ்ரானா மனு அளித்தார். மனு அடிப்படையில் சம்பந்தப்பட்டோர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து அகமதுபாஷா, அபு, ஜலால் ஆகியோர் மீது மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றன்ர.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

பைக்கில் சென்ற பெண்ணின் நகை பறிப்பு

தில்லியில் பயங்கரவாத சதி: வங்கதேசத்தினா் உள்பட 8 போ் கைது

SCROLL FOR NEXT