முகப்பு
தமிழ்நாடு

நீர்பிடிப்பு பகுதியில் மிதமான மழை:சேர்வலாறு, அடவிநயினார் அணைகளின் நீர்மட்டம் உயர்வு

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மிதமான மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பாபநாசம், சேர்வலாறு, அடவிநயினார், கடனாநதி அணைகளின்

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:51 AM
பகிர்:

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மிதமான மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பாபநாசம், சேர்வலாறு, அடவிநயினார், கடனாநதி அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

தென்மேற்கு பருவ மழை சரிவர பெய்யாத காரணத்தால் தாமிரவருணி பாசனத்தில் கார் பருவ சாகுபடிக்கு தாமதமாக அணைகளில் இருந்து ஜூலை 4 ஆம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. திருநெல்வேலி மாவட்டத்தில் 4 கால்வாய்கள் மூலம் பாசனம் பெறும் 18,090 ஏக்கர் நிலங்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. 
இதனிடையே தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை பாபநாசம் அணையில் இருந்து 900 கனஅடியும், மணிமுத்தாறு அணையில் இருந்து 100 கனஅடியும், கடனாநதி அணையில் இருந்து 60 கனஅடியும், ராமநதி அணையில் இருந்து 40 கனஅடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்நிலையில் நீர்பிடிப்பு பகுதியில் மிதமான மழை பெய்துள்ளது.

மிதமான மழை: வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி பாபநாசம் அணையில் 22 மி.மீ மழையும், சேர்வலாறு அணையில் 16 மி.மீ, மணிமுத்தாறு அணையில் 1.8 மி.மீ மழையும், கடனாநதி அணையில் 6 மி.மீ மழையும், கருப்பாநதி அணையில் 16 மி.மீ மழையும், குண்டாறு அணையில் 14 மி.மீ மழையும், அடவிநயினார் அணையில் 20 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.

நீர்வரத்து அதிகரிப்பு: நீர்பிடிப்பு பெய்த மழையால் அணைகளுக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 1362 கனஅடியும், கடனாநதி அணைக்கு விநாடிக்கு 66.8 கனஅடியும், ராமநதி அணைக்கு விநாடிக்கு 53.88 கனஅடியும், குண்டாறு அணைக்கு விநாடிக்கு 12 கனஅடியும், அடவிநயினார் அணைக்கு விநாடிக்கு 20 கனஅடியும் நீர்வரத்து இருந்தது.

நீர்மட்டம் உயர்ந்தது: நீர்வரத்து அதிகரித்ததை அடுத்து பாபநாசம் அணையின் நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 58.55 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 2.55 அடி உயர்ந்து 72.37 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 60.25 அடியாகவும், கடனாநதி அணையின் நீர்மட்டம் 2.20 அடி உயர்ந்து 51.00 அடியாகவும், ராமநதி அணையின் நீர்மட்டம் 64.50 அடியாகவும், அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 71.00 அடியாகவும் இருந்தது.

கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 42.26 அடியாகவும், குண்டாறு அணை நீர்மட்டம் 35.75 அடியாகவும், வடக்கு பச்சையாறு அணையின் நீர்மட்டம் 2.00 அடியாகவும், நம்பியாறு அணையின் நீர்மட்டம் 10.23 அடியாகவும் இருந்தது

முழு கட்டுரையைப் படிக்க →