மதுரையில் மருத்துவ குணம் கொண்ட நவீன மெத்தை தருவதாகக் கூறி 11 பேரிடம் ரூ.89 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் பேரில் கணவர், மனைவி மற்றும் மகளைப் போலீஸார் தேடிவருகின்றனர்.
கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராம்குமார். வெளிநாட்டில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர் பரிசுப் பொருள்கள் கடை வைத்துள்ளார். அப்பகுதியைச் சேர்ந்தவர்களிடம் நவீன மருத்துவ குணம் கொண்ட மெத்தை வாங்கித்தருவதாகக் கூறி பணம் வசூலித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், மெத்தை வாங்கித்தராமல் ஏமாற்றியதாக கடந்த சில வாரங்களுக்கு முன் புகார் எழுந்தது.
ஜெயலட்சுமி மற்றும் அவர் கணவர், மகள் மீது அண்ணாநகர் குற்றப்பிரிவிலும் சிலர் புகார் அளித்தனர். இந்நிலையில் தற்போது அவர்கள் மீது மேலும் பலர் புகார் அளித்துள்ளனர். அதனடிப்படையில் 11 பேரிடம் ஜெயலட்சுமி தரப்பில் ரூ.89 லட்சம் வரை பணம் வசூலித்து ஏமாற்றியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என அண்ணாநகர் குற்றப்பிரிவு ஆய்வாளர் சந்திரன் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், கே.கே.நகர் உள்ளிட்ட பகுதிகளில் மெத்தை வாங்கித்தர பணம் கொடுத்து ஏமாந்திருந்தால் புகார் அளிக்கலாம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.