பழனியில் ஆடி அமாவாசை கூட்டம்
ஆடிமாதம் வரும் அமாவாசை சிறப்பு வாய்ந்ததாகும். ஆடிஅமாவாசையை முன்னிட்டு சனிக்கிழமை பழனி சண்முகநதி உள்ளிட்ட பல்வேறு தீர்த்தங்களில் ஏராளமானோர் முன்னோர்களுக்கு வழிபாடு செய்தனர். பழனி
பழனியில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் மலைக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.
ஆடிமாதம் வரும் அமாவாசை சிறப்பு வாய்ந்ததாகும். ஆடிஅமாவாசையை முன்னிட்டு சனிக்கிழமை பழனி சண்முகநதி உள்ளிட்ட பல்வேறு தீர்த்தங்களில் ஏராளமானோர் முன்னோர்களுக்கு வழிபாடு செய்தனர். பழனி மலைக்கோயிலிலும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பாப்பம்பட்டியை அடுத்த ஐவர்மலை அருள்மிகு குழந்தை வேலப்பர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சுக்கமநாயக்கன்பட்டி அருள்மிகு செல்லியாண்டியம்மன் கோயிலில் மாவிளக்கு பூஜை, பொன்னர்சங்கர் நாடகம் ஆகியன நடைபெற்றது.
கீரனூர் அருள்மிகு மதகடி கருப்பணசாமி, அருள்மிகு கண்டியம்மன் கோயில், கஞ்சநாயக்கன்பட்டி அருள்மிகு கரைக்கருப்பண்ணசாமி கோயில்களில் தீர்த்தம் எடுத்தல், அன்னதானம் ஆகியன சிறப்பாக நடைபெற்றது.