முகப்பு
தமிழ்நாடு

காதலிக்குமாறு கல்லூரி மாணவிக்கு மிரட்டல்: தட்டிகேட்ட தந்தைக்கு அடி உதை 

பழனி அருகே முத்துநாயக்கன்பட்டியில் கல்லூரி மாணவியை மிரட்டிய செய்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:39 AM
பகிர்:

பழனி அருகே முத்துநாயக்கன்பட்டியில் கல்லூரி மாணவியை மிரட்டிய செய்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

பழனி அருகே முத்துநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் நடராஜ் மகள் வசுமதி (19). பொள்ளாச்சியில் தனியார் பொறியியல் கல்லூரியில் 3ம் படித்து வருகிறார். இவரை இதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (25) என்பவர் ஒருதலை பட்சமாக காதலித்து வந்துள்ளார். வசுமதியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறி அடிக்கடி மிரட்டி வந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவத்தன்று வசுமதியின் வீட்டிற்கு கார்த்திக், அவரது உறவினர்கள் மணிகண்டன், ரவிச்சந்திரன் (35), மணிகண்டன் ஆகியோருடன் சென்று தகராறு செய்துள்ளார்.இதனை வசுமதியின் தந்தை நடராஜ் தட்டி கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் நடராஜை, கார்த்திக் தரப்பினர் சரமாரியாக தாக்கி, கல்லால் அடித்துள்ளனர்.

இதில் படுகாயமடைந்த நடராஜ் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்து நடராஜ் கொடுத்த புகாரின் பேரில் சாமிநாதபுரம் போலீசார் கார்த்திக் மற்றும் ரவிச்சந்திரனை மீது வழக்குப்பதிவு செய்து  கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்ற 2 பேரை தேடி வருகின்றனர்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.