தமிழ்நாடு

கொடைக்கானல் அருகே விஷம் அருந்தி கள்ளக்காதல் ஜோடி சாவு

கொடைக்கானல் அருகே வனப் பகுதியில் விஷம் அருந்தி கள்ள ஜோடியினர் இறந்து கிடந்துள்ளனர்.கொடைக்கானலிலிருந்து 25-கி.மீ தூரமுள்ளது அடுக்கம் ஊராட்சிக்குட்பட்ட

ஏ. ஆரோக்கியசாமி

கொடைக்கானல் அருகே வனப் பகுதியில் விஷம் அருந்தி கள்ள ஜோடியினர் இறந்து கிடந்துள்ளனர்.

கொடைக்கானலிலிருந்து 25-கி.மீ தூரமுள்ளது அடுக்கம் ஊராட்சிக்குட்பட்ட தாமரைக்குளம் இப் பகுதிக்கு அருகே வனப் பகுதியில் இரண்டு பேர் இறந்து கிடப்பதாக கொடைக்கானல் காவல் துறையினருக்கு பொது மக்கள் தகவல் கொடுத்தனர் இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு கொடைக்கானல் எஸ்.ஐ.முத்துக்குமார் மற்றும் போலீஸார் சென்று இறந்து கிடந்த இரண்டு பேரின் சடலங்களைக் கைப்பற்றி கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர்.

இது குறித்து கொடைக்கானல் காவல்துறையினர் கூறியதாவது,

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் செல்வம்(37) இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது அதேப் பகுதியைச் சேர்ந்தவர் சுமதி(33)இவருக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன.இந் நிலையில் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக பழகி வந்துள்ளனர்.இந்த விபரம் தங்களது இருவரது வீட்டிற்கும் தெரிய வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து இருவரும் கடந்த மூன்று நாட்களுக்கு முன் கொடைக்கானல் வந்து தங்கிவிட்டு விஷம் அருந்தி இறந்துள்ளனர்.இவர்கள் இருவரும் காணவில்லையென இருவரது உறவினர்களும் பெரியகுளம் காவல் நிலையத்தில் ஏற்கனவே புகார் கொடுத்துள்ளனர் தொடர்ந்து விசாரனை நடைபெற்று வருகிறது என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

பிக் பாஸ் 9: சூடுபிடிக்கும் போட்டி! இந்த வாரமும் இருவர் வெளியேற்றம்!!

SCROLL FOR NEXT