அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டர்கள் பறிமுதல்
பழனியை அடுத்த சண்முகநதியில் இரவு, பகல் பாராமல் தொடர்ந்து மணல் கொள்ளை நடைபெற்று வந்தது. இதுகுறித்து அவ்வப்போது புகார்கள் எழும் நிலையில் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை
பழனி சண்முகநதியில் அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
பழனியை அடுத்த சண்முகநதியில் இரவு, பகல் பாராமல் தொடர்ந்து மணல் கொள்ளை நடைபெற்று வந்தது. இதுகுறித்து அவ்வப்போது புகார்கள் எழும் நிலையில் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை ஆகியன நடவடிக்கை எடுத்து மாட்டுவண்டிகளை பறிமுதல் செய்து வந்தனர். கடந்த சில நாட்களாக விநாயகர்சிலைகள் கரைப்பதற்காக சண்முகநதியில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு கண்காணிப்பு பணி நடைபெற்று வந்தது.
தற்போது சிலை கரைப்பு நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர் கண்காணிப்பு இல்லாத நிலை உள்ளது. வெள்ளிக்கிழமை அதிகாலை சண்முகநதியில் பெரியாவுடையார் கோயில் அருகே டிராக்டர்களில் மண் அள்ளப்படுவதாக வருவாய்த்துறைக்கு வந்த தகவலைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு அதிகாரிகள் சென்று பார்த்த போது ஐந்து டிராக்டர்களில் மணல் அள்ளப்படுவது தெரியவந்தது. அதிகாரிகளை கண்டவுடன் டிராக்டரில் இருந்த மண்ணை கொட்டிவிட்டு டிரைவர்கள் தப்பி ஓடினர். டிராக்டர்களை வருவாய்துறையினர் பறிமுதல் செய்து வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நிறுத்தினர். இதுதொடர்பாக டிராக்டர் உரிமையாளர்கள் பிரபு, காளிதாஸ் உள்ளிட்ட ஐந்து பேருக்கு தலா ரூபாய் இருபத்து ஏழாயிரத்து ஐநூறு அபராதம் விதிக்கப்பட்டது.