10 மாதங்களுக்கு முன் நடந்த பெண் டாக்டர் கொலை வழக்கில் இளைஞர்கள் 2 பேர் கைது
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகேயுள்ள நெ.1 டோல்கேட் மாருதிநகரில் உள்ள வாடகை வீட்டில் தனியாக வசித்த பெண் டாக்டர் கடந்தாண்டு அக்டோபர் மாதம் முகம் முழுவதும்பிளாஸ்டிக் டேப் ரோலால் சுற்றி கொலை செய்து நகைகள் திருட்டு போன வழக்கில் இரண்டு இளைஞர்களை தனிப்படை போலீஸôர் சனிக்கிழமை கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகேயுள்ள நெ.1 டோல்கேட் மாருதிநகரில் உள்ள வாடகை வீட்டில் தனியாக வசித்த பெண் டாக்டர் கடந்தாண்டு அக்டோபர் மாதம் முகம் முழுவதும்பிளாஸ்டிக் டேப் ரோலால் சுற்றி கொலை செய்து நகைகள் திருட்டு போன வழக்கில் இரண்டு இளைஞர்களை தனிப்படை போலீஸôர் சனிக்கிழமை கைது செய்தனர்.
சமயபுரம் நெ.1 டோல்கேட் அருகேயுள்ள மாருதி நகரில் வாடகை வீட்டில் கடந்த 10 வருடமாக வசிப்பவர் ஜூலியட் (60). மருத்துவரான இவர் எம்டி முடித்து விட்டு நெ.1 டோல்கேட்டில் உள்ள பிரபலமருத்துவமனையில் கடந்த 18 வருடமாக டாக்டராக பணிபுரிந்துவருகிறார். கணவனை பிரிந்து வாழும் இவருக்கு ஜோஸ்வா (31) என்றமகன் மட்டும் உள்ளார். இவர் பொறியியல் படித்து விட்டு பெங்களூரில்தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்கிறாராம்.
மருத்துவமனையில் இரவு பணியினை மட்டுமே பார்க்கும் டாக்டர் ஜூலியட் பகலில் தனது வீட்டில் தனியாக கிளினிக் வைத்துநோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார். இந்நிலையில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் புதன்கிழமை மாலை வீட்டில் தனியாக இருந்த இவர் நீண்டநேரமாகியும் வெளியே வராததால் மேல் வீட்டில் குடியிருந்தவர்கள்வந்து பார்த்த போது முகத்தின் மீது தலையணை மூடிய நிலையில்இறந்து கிடந்தார்.
இது குறித்து சமயபுரம் நெ.1 டோல்கேட் போலீஸôருக்கு தகவல்கொடுத்ததின் பேரில் அப்போதைய லால்குடி காவல்துணைக் கண்காணிóப்பாளர்அசோகன், காவல் ஆய்வாளர்கள் மனோகரன் (சமயபுரம்) போலீஸôர் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது பெண் டாக்டர் முகம் முழுவதும் பிளாஸ்டிக் டேப் ரோலால் சுற்றிய நிலையில் இறந்து கிடந்தார். சடலத்தை கைப்பற்றி போலீஸார்பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். விரல்ரேகை நிபுணர்களும் வந்திருந்தனர். தடயங்கள்எதுவும் கிடைக்கவில்லை. இதனால் தனிப்படைகளை போலீஸார் நியமித்து கொலையாளிகளை தேடி வந்தனர்.
கொலை நடந்தன்று மாலை அவரது வீட்டின் முன்பு வெள்ளை நிறமாருதி கார் வெகு நேரமாக நின்றதாகவும், அவரது வீட்டில் இரண்டுஆண்கள் டாக்டரிடம் பேசிக்கொண்டு இருந்ததாகவும் அப் பகுதியினர்போலீஸாரிடம் கூறியதன் பேரில் மேற்படி கார் சமயபுரம்டோல்பிளாசாவிலிருந்து வந்து சென்றதற்கான வீடியோ எதுவும்பதிவாகவில்லை. ராமஜெயம் கொலை செய்ததனைப் போல இந்தகொலையும் வாயில்துணியினை தினித்து பின்னர் டேப்ரோல் சுற்றிமூச்சி தினறவைத்து கொலை செய்துள்ளனர். இறந்த பெண் டாக்டர்இடதுகைவிரல் நகத்தில் ஆண்தலைமுடி இருந்துள்ளது இதனை வைத்து கடந்த 8 மாதமாக தனிப்படை போலீஸார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர்.
பல்வேறு தனிப்படை போலீஸôர் பல்வேறு நிலையில் தீவிர புலன் விசாரணை நடத்தி வந்த நிலையில் திருச்சி காட்டுப்புத்தூரில் உள்ள தனியார் டாக்டரை இரண்டு வாலிபர்கள் மிரட்டி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இது தொடர்பாக அப் பகுதி போலீஸôர் இருவரையும் பிடித்து விசாரணை செய்ததில் திருச்சி மண்ணச்சநல்லூர் அருகேயுள்ள கோபுரப்பட்டியினைச் சேர்ந்த பிரகாஷ் (29), நெ.1 டோல்கேட் கூத்தூர் பகுதியினைச் சேர்ந்த பிரபு என்பதும் தெரிய வந்தது. இவர்கள் திருச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு டாக்டர்களை மிரட்டி பணம் பறிப்பு இவர்கள் உள்ளிட்டோர் ஒரு ரவுடி கூட்டம் உள்ளதெனவும், டாக்டர் ஜூலியட் கொலையினை இவர்கள் தான் செய்தனர் என ஒப்புக் கொண்டதின் பேரில் திருச்சி மாவட்ட காவல்கண்காணிப்பாளர் ராஜேஸ்வரி- உள்ளிட்ட உயர் போலீஸôருக்கு தகவல் தெரிவித்து சமயபுரம் காவல்நிலையத்தில் இருவரையும் வைத்து விசாரணை நடத்தினர். அப்போது சனிக்கிழமை அதிகாலை
மாவட்ட போலீஸ் எஸ்.பி ராஜேஸ்வரி சமயபுரம் காவல்நிலையம் வந்து கொலையாளிகள் இருவரிடம் சுமார் 20 நிமிடம் விசாரணை நடத்தினார். ஆனால் ராமஜெயம் கொலைக்கும் டாக்டர் கொலைக்கும் தொடர்பில்லை என்கின்றனர் போலீஸார்.