குடும்பத் தகராறு: இளம் பெண் விஷம் குடித்து தற்கொலை
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே குடும்ப பிரச்சனை காரணமாக இளம் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தமிழ்நாடுகுடும்பத் தகராறு: இளம் பெண் விஷம் குடித்து தற்கொலை
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே குடும்ப பிரச்சனை காரணமாக இளம் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே குடும்ப பிரச்சனை காரணமாக இளம் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள செம்பட்டையன்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துக்கூடன் மகள் சித்ரா (25). இவருக்கும் சிவகாசியைச் சேர்ந்த பாண்டியராஜ் என்பவருக்கும் 11 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்று இரு மகன்கள் உண்டு. சித்ரா தாய் வீட்டிற்கு ஒரு வாரத்திற்கு முன் வந்துள்ளார்.
அந்த 1 வாரமாக, இதே இடத்தைச் சேர்ந்த சரவணன் என்பவர் இரவு நேரங்களில் சித்ரா குடியிருக்கும் தெருவிற்குள் சுற்றிக் கொண்டிருந்துள்ளார். இது குறித்து அருகில் உள்ளவர்கள் விசாரிக்க சித்ரா வீட்டிற்கு வருவதாய் கூறியுள்ளார். இது சிவகாசியில் உள்ள பாண்டியராஜன் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு தெரியவரவே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சித்ரா குடும்பத்தார் சென்று பேசி முடித்து சித்ராவை அங்கு விட்டு வந்துள்ளார்கள். அன்றைய தினம் மாலையே சித்ரா தனது மூத்த மகனைத் தூக்கிக் கொண்டு தாய் வீட்டிற்கு வந்துள்ளார்.
திங்கள்கிழமை சிவகாசி சென்று இளைய மகனைப் பார்க்க சித்தரா சென்றுள்ளார். அங்கிருந்த பாண்டியராஜூன் சகோதரியும் அவரது கணவரும், சித்ராவிடம் பாண்டியராஜ் கேரளாவிற்கு சென்றுவிட்டார். நீ உன் அம்மா வீட்டிலேயே போய் இருந்து கொள் என்று சத்தம் போட்டுள்ளார்கள். இதனால் மனம் உடைந்து, தனது இளைய மகனை தூக்கிக் கொண்டு, சித்ரா தாய் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு விஷம் குடித்துள்ளார். ஆபத்தான நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி செவ்வாய்கிழமை உயிரிழந்தார். இது குறித்து சித்ராவின் தாய் முனியம்மாள் கிருஷ்ணன்கோவில் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் புதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.