மதுவிலக்கு பேராட்டம்: ஸ்ரீவில்லிபுத்தூரில் முழு அடைப்பிற்கு ஆதரவு இல்லை
மதுவிற்கு எதிராக சில கட்சிகள் அழைப்பு விடுத்திருந்த கடையடைப்பு போராட்டத்திற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் ஆதரவு இல்லை.
தமிழ்நாடுமதுவிலக்கு பேராட்டம்: ஸ்ரீவில்லிபுத்தூரில் முழு அடைப்பிற்கு ஆதரவு இல்லை
மதுவிற்கு எதிராக சில கட்சிகள் அழைப்பு விடுத்திருந்த கடையடைப்பு போராட்டத்திற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் ஆதரவு இல்லை.
மதுவிற்கு எதிராக சில கட்சிகள் அழைப்பு விடுத்திருந்த கடையடைப்பு போராட்டத்திற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் ஆதரவு இல்லை.
வழக்கம்போல் அனைத்து கடைகளும் திறந்திருந்தன. அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வழக்கம் போல இயங்கின.
கைது: ஸ்ரீவில்லிபுத்தூர் ராமகிருஷ்ணாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகரச் செயலாளர் பா.புனிதன் (53), மாவட்ட துணைச் செயலாளர் மா.வைரமுத்து (35) ஆகியோரை நகர் காவல் ஆய்வாளர் சுந்தரபாண்டியன் கைது செய்தார்.
மல்லியில் ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற மதிமுக மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் சீ.முருகன் (42), இணைச் செயலாளர் ச.ஸ்ரீதர் (42) ஆகியோரை சார்பு ஆய்வாளர் மகேஸ்வரி கைது செய்தார்.