குடும்ப பொருளாதார வளர்ச்சிக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி, கடின உழைப்பு அவசியம்
குடும்ப பொருளாதார வளர்ச்சிக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சியும் கடின உழைப்பும் அவசியம்
தமிழ்நாடுகுடும்ப பொருளாதார வளர்ச்சிக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி, கடின உழைப்பு அவசியம்
குடும்ப பொருளாதார வளர்ச்சிக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சியும் கடின உழைப்பும் அவசியம்
குடும்ப பொருளாதார வளர்ச்சிக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சியும் கடின உழைப்பும் அவசியம் என் மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் மக்கள் கல்வி நிறுவனத்தின் இயக்குநர் இ.விஜயலட்சுமி கூறினார்.
2014-15-ம் ஆண்டு மக்கள் கல்வி நிறுவனத்தின் மூலம் விருதுநகர் மாவட்டத்தில் தையல்கலை, அழகுக்கலை, இன்வெர்ட்டர் அசெம்பிளிங், எம்பிராய்டரி, ஆரி வேலைப்பாடுகள், மென்பொம்மைகள் தயாரித்தல், உல்லன் உள்ளிட்ட தொழிற் பயிற்சிகள் பயின்ற 478 பயனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவிற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம், அயன்நாச்சியார்கோவில் ஊராட்சி மன்றத் தலைவி சந்திரபிரபா முன்னிலை வகித்தார். திட்ட அலுவலர் கிருஷ்ணசாமி வரவேற்றார்.
விழாவிற்கு மக்கள் கல்வி நிறுவனத்தின் இயக்குநர் இ.விஜயலட்சுமி தலைமையேற்று, பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழை வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
விருதுநகர் மாவட்டம் மனிதவளம் மிக்கதொரு மாவட்டம். இங்கு வேலையில்லாத நபர்களின் எண்ணிக்கை குறைவு. உலகில் நம் வாழ்வாதாரத்தைப் பூர்த்தி செய்து கொள்வதற்காகவும், குடும்ப செலவுகளை சமாளிப்பதற்காகவும் ஆணும், பெண்ணும் ஏதாவது ஒரு தொழிலை தேர்வு செய்து, அதில் வருமானம் ஈட்டும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.
இந்தச் சூழ்நிலையில் எந்தத் தொழிலை தேர்வு செய்வது, அதற்குண்டான பயிற்சிகள் எங்கு கிடைக்கும் என்று தேடல் உள்ளவர்களுக்கு, விருதுநகர் மாவட்ட மக்கள் கல்வி நிறுவனம் பல்வேறு தொழிற் பயிற்சிகளை வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு பயிற்சி முடித்துள்ள நீங்கள், ஒவ்வொருவரும் உங்களின் குடும்ப பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும் என்றால், கற்ற கைத்தொழிலைக் கொண்டு கடின உழைப்புடன் திறன் மேம்பாட்டுப் பயிற்சியும் எடுத்துக் கொண்டு, தொழிலை ஆர்வத்துடனும், உழைப்பில் ஈடுபாட்டுடனும், நம்பிக்கையுடனும் செயல்பட்டால் வாழ்வில் வளம் காண முடியும். அதற்கு நீங்கள் ஒவ்வொருவரும் உழைக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். நிகழ்ச்சியில் மக்கள் கல்வி நிறுவனத்தின் அலுவலர்கள், பயனாளிகள், பயிற்றுநர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். பயிற்றுனர் விமலா நன்றி கூறினார்.