தமிழ்நாடு

காரைக்காலில் ரூ.83 லட்சத்தில் சாலை அமைக்கும் பணி தொடக்கம்

சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு  போடப்பட்ட சாலை மேம்படுத்தும் பணி, சாலவம் அமைக்கும் பணியை சட்டப்பேரவை உறுப்பினர் திங்கள்கிழமை தொடங்கிவைத்தார்.

செல்வமுத்து

சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு  போடப்பட்ட சாலை மேம்படுத்தும் பணி, சாலவம் அமைக்கும் பணியை சட்டப்பேரவை உறுப்பினர் திங்கள்கிழமை தொடங்கிவைத்தார்.

காரைக்கால் வடக்குத் தொகுதிக்குள்பட்ட வேட்டைக்காரன் தெரு, பிரதான பாரதியார் சாலையில் தொடங்கி சுமார் ஒரு கிலோ மீட்டர் நீளமுடையது. இச்சாலை சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு  போடப்பட்டதாக கூறப்படுகிறது. முற்றிலும் சிதிலமடைந்து, குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது போக்குவரத்துக்கு தகுதியற்றதாக இருப்பதாக குடியிருப்புவாசிகள் புகார் தெரிவித்துவந்தனர்.

புதுச்சேரி கிராம மற்றும் நகரமைப்புத் துறை மூலம் ரூ.83 லட்சம், வேட்டைக்காரன் தெரு சாலை, சாலவம் அமைக்க புதுச்சேரி முதல்வர் அனுமதி வழங்கினார். காரைக்கால் நகராட்சி நிர்வாகம் சார்பில், சாலை அமைக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

காரைக்கால் வடக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பி.ஆர்.என்.திருமுருகன் கலந்துகொண்டு பணிகளை தொடங்கிவைத்தார். அவர் கூறும்போது, நீண்ட காலமாக சாலை புதுப்பிக்கப்படாமல் இருப்பதாக பொதுமக்கள் புகார் கூறினர். இதுகுறித்து முதலமைச்சரிடம் எடுத்துக்கூறியதன்பேரில், ரூ.83 லட்சம் ஒதுக்கீடு செய்ய உத்தரவு வழங்கினார். இப்பணியை நகராட்சி நிர்வாகம் ஏற்றுள்ளது. 700 மீட்டர் நீளத்தில் சாலையும், இருபுறமும் சாலவமும் கட்டப்படுகிறது. இப்பகுதியில் வசிக்கும் அனைத்துக்கட்சியினருக்கும் மகிழ்ச்சியான தருணம் என்றார் அவர்.

நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் காந்திராஜன், இளநிலைப் பொறியாளர் முத்துக்குமரபதி உள்ளிட்ட அப்பகுதி குடியிருப்புவாசிகள் பலர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆதனூரில் கட்டப்பட்ட உயா்மட்ட பாலம் திறப்பு

மாா்த்தாண்டம் அருகே பதுக்கிய மண்ணெண்ணெய் பறிமுதல்

போதையில்லா சமுதாயமே இலக்கு...

ரத்த சோகை விழிப்புணா்வு: 3,500 பெண்களுக்கு ஹீமோகுளோபின் பரிசோதனை

பாா்வை பறிபோன பெண்ணுக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

SCROLL FOR NEXT