ரூ.200 லஞ்சம்: முத்திரை ஆய்வாளருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் தராசு மற்றும் எடைக் கற்களில் முத்திரை வைக்க ரூ.200 லஞ்சம் பெற்ற வழக்கில் முத்திரை ஆய்வாளருக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து மாவட்ட தலைமை குற்றவியல் நீதிபதி ஜான் ஆர்.டி.சந்தோஷம் செவ்வாய்கிழமை உத்தரவிட்டார்.
தமிழ்நாடுரூ.200 லஞ்சம்: முத்திரை ஆய்வாளருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் தராசு மற்றும் எடைக் கற்களில் முத்திரை வைக்க ரூ.200 லஞ்சம் பெற்ற வழக்கில் முத்திரை ஆய்வாளருக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து மாவட்ட தலைமை குற்றவியல் நீதிபதி ஜான் ஆர்.டி.சந்தோஷம் செவ்வாய்கிழமை உத்தரவிட்டார்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் தராசு மற்றும் எடைக் கற்களில் முத்திரை வைக்க ரூ.200 லஞ்சம் பெற்ற வழக்கில் முத்திரை ஆய்வாளருக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து மாவட்ட தலைமை குற்றவியல் நீதிபதி ஜான் ஆர்.டி.சந்தோஷம் செவ்வாய்கிழமை உத்தரவிட்டார்.
வத்திராயிருப்பு, மகாராஜபுரம்-மாத்தூர் சாலையில் இறைச்சிக் கடை வைத்திருப்பவர் ஜீவானந்தம். இவர் கடையில் உள்ள மேடை தராசு மற்றும் எடைக் கற்களில் அரசு முத்திரையிடுவதற்காக 19.9.2005-ம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் அருகேயுள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்திற்கு வந்துள்ளார். அங்கிருந்த முத்திரை ஆய்வாளர் குருசாமி, முத்திரை வைக்க ரூ.200 லஞ்சம் கேட்டுள்ளார். இதனைத் தர மனதில்லாத ஜீவானந்தம், விருதுநகரில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் செய்தார். அவர்களது ஆலோசனையின் பேரில், ரசாயன பொடி தடவப்பட்ட பணம் ரூ.200 யை 21.9.2005-ம் தேதி ஜீவானந்தம், முத்திரை ஆய்வாளர் குருசாமியிடம் கொடுக்கும் போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் குருசாமியைக் கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜான் ஆர்.டி.சந்தோஷம், குருசாமிக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்துத் தீர்ப்புக் கூறினார்.