முகப்பு
தமிழ்நாடு

திருக்கழுக்குன்றம் செயல் அலுவலர் தாற்காலிக பணியிடை நீக்கம்

திருக்கழுக்குன்றம் செயல் அலுவலரை பேரூராட்சிகள் இயக்குநரகம் தாற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

Updated On : 9 ஜனவரி, 2024 at 6:31 AM
பகிர்:

திருக்கழுக்குன்றம் செயல் அலுவலரை பேரூராட்சிகள் இயக்குநரகம் தாற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

திருக்கழுக்குன்றம் பேரூராட்சி செயல் அலுவலராக பணிபுரிந்தவர் சுந்தரம். இவர் பேரூராட்சிக்குள்பட்ட வீட்டு மனைக்கு ஒப்புதல் அளித்துள்ளார். இதில் செயல் அலுவலரது அதிகாரத்துக்குள்படாத பகுதிக்கு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், இதனால் அரசுக்கு நிதி இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக புகார்கள் சென்னை குறளகத்தில் உள்ள பேரூராட்சிகள் இயக்குநரகத்துக்கு அனுப்பப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து பேரூராட்சிகள் இயக்குநர் உத்தரவின் பேரில் இயக்குநரக அலுவலர்கள் திருக்கழுக்குன்றத்தில் கடந்த வாரம் ஆய்வு செய்தனர். இதில் செயல் அலுவலர் சுந்தரம் அரசுக்கு நிதி இழப்பீடு செய்தது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து சுந்தரத்தை தாற்காலிக பணியிடை நீக்கம் செய்து பேரூராட்சிகள் இயக்குநர் கடந்த ஆகஸ்ட் 19-ஆம் தேதி புதன்கிழமை உத்தரவிட்டார். இது அவருக்கு அன்றைய தினம் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து செயல் அலுவலர் சுந்தரம் கடந்த ஆகஸ்ட் 20-ஆம் தேதி வியாழக்கிழமை தாற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.