ஓமலூர் அருகே கரும்பாலைகளுக்கு விற்பனை செய்வதற்காக சர்க்கரையைப் பதுக்கி வைத்திருந்த கிடங்குக்கு உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் "சீல்' வைத்தனர்.
சேலம் மாவட்டம், ஓமலூர் காமலாபுரம் பகுதியில் உள்ள கரும்பாலைகளுக்கு தனியார் ஒருவர் சர்க்கரை மூட்டைகளைப் பதுக்கிவைத்து விற்பனை செய்து வருவதாக வந்த புகாரையடுத்து, மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் மருத்துவர் அனுராதா தலைமையிலான அதிகாரிகள் காமலாபுரம் பகுதியில் புதன்கிழமை சோதனை நடத்தினர்.
இதில், தனராஜ் (42) என்பவர் தான்நடத்திவரும் உரக்கடை அருகே உள்ள கிடங்கில் சர்க்கரை மூட்டைகளைப் பதுக்கி வைத்து, கரும்பாலைகளுக்கு விற்பனை செய்துவந்தது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, அந்த கிடங்குக்கு அதிகாரிகள் "சீல்' வைத்தனர். அங்கிருந்த 280 மூட்டை சர்க்கரையை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், எந்த விதமான அனுமதியும் இன்றி சர்க்கரையைப் பதுக்கிவைத்தது, உரக் கடை விற்பனை உரிமத்தைப் புதுப்பிக்காமல் விற்பனை செய்துவந்தது குறித்து உணவுப் பாதுகாப்புத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.