தமிழ்நாடு

காரைக்காலைச் சேர்ந்த 10 மீனவர்களை சிறைப்பிடித்தது இலங்கை

காரைக்கால் பகுதியிலிருந்து கடலில் மீன் பிடிக்க சென்ற 10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று கைது செய்தனர்.

PTI

காரைக்கால் பகுதியிலிருந்து கடலில் மீன் பிடிக்க சென்ற 10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று கைது செய்தனர்.

வீரமணி என்பவருக்கு சொந்தமான படகில் மீன் பிடிக்க சென்ற 10 பேர், சர்வதேச எல்லையை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தள்ளதாக மீன்வளத் துறை துணை இயக்குநர் காளிமுத்து கூறினார்.

இதனிடையே கடந்த நவம்பர் 26 ஆம் தேதி கைது செய்யப்பட்ட இதே பகுதியைச் சேர்ந்த 6 மீனவர்களின் நீதிமன்ற காவலை டிசம்பர் 21 ஆம் தேதி வரை நீடித்து முனாறு நீதிபதி கிளாசி அலெக்ஸ் ராஜா உத்தரவிட்டார்.

மேலும் அதே நவம்பர் 26 ஆம் தேதி கைது செய்யப்பட்ட ராமேஸ்வரத்தை சேர்ந்த 5 மீனவர்கள் மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த 4 மீனவர்களின் காவலை டிசம்பர் 23 ஆம் தேதி வரை நீட்டித்து யாழ்பாணம் முதன்மை நீதிமன்ற நீதிபதி சரோஜினி உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு

நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி

நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம்

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT