முகப்பு
தமிழ்நாடு

டேங்கர் லாரி வெடித்து சேதம்: ரூ.2.03 லட்சத்தை ரூ.10 ஆயிரம் இழப்பீட்டுடன் வழங்க ஆணை

டேங்கர் லாரி வெடித்து சேதமுற்றதற்கான செலவுத் தொகை ரூ.2,03,250-யை ரூ.10 ஆயிரம் இழப்பீட்டுத் தொகையுடன் வழங்க விருதுநகர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் செவ்வாய்கிழமை உத்தரவிட்டது.

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:48 AM
பகிர்:

டேங்கர் லாரி வெடித்து சேதமுற்றதற்கான செலவுத் தொகை ரூ.2,03,250-யை ரூ.10 ஆயிரம் இழப்பீட்டுத் தொகையுடன் வழங்க விருதுநகர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் செவ்வாய்கிழமை உத்தரவிட்டது.

சிவகாசி, சாத்தூர் சாலையைச் சேர்ந்தவர் மீனாட்சி. இவர் பாண்டி ஏஜென்ஸி என்ற பெயரில் டேங்கர் லாரி வைத்திருந்தார். வண்டிக்கு தகுதிச் சான்றிதழ் பெறுவதற்காக வர்ணம் பூச வேண்டியிருந்தது. இதற்காக டு பிரண்டஸ் பெயிண்டர் செட் என்ற நிறுவனத்தில் லாரியை 8.1.09- ம் தேதி விட்டிருந்தார். மறுநாள் மேலாளர் பால்ராஜ், வேலையாள் மூர்த்தி ஆகியோரை வண்டியைப் போய் பார்த்து வரக் கூறியுள்ளார்.

டேங்கர் லாரியில் தண்ணீர் நிரப்பி வைக்கப்படிருந்துள்ளது. மூர்த்தி ஏறி, மூடியை அகற்ற முயன்றுள்ளார். அப்போது மேலாளர் பால்ராஜ் புகை பிடிக்க சிகரெட் பற்றவைத்துள்ளார். அப்போது டேங்கர் தீப்பற்றி வெடித்துள்ளது. இதில் மூர்த்தி தூக்கி எறியப்பட்டு பலத்த காயமுற்றார். பால்ராஜ் சிறிய காயமுற்றார். இது குறித்து சிவகாசி கிழக்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

டேங்கர் லாரி, 28.11.08 முதல் 27.11.09 முடிய சிவகாசி தி யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனியில் காப்பீடு செய்யப்பட்டிருந்தது. வண்டியை பழுது பார்த்த வகையில் 2.67 லட்சம் செலவு ஆனதாக காப்பீட்டு நிறுவனத்திற்கு 9.1.09-ல் கடிதம் எழுதியுள்ளார்கள். ஆனால் காப்பீட்டு நிறுவனம் 3.12.09-ம் தேதி கோரிக்கையை நிராகரித்துவிட்டது.

இதனையடுத்து மீனாட்சி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் மனு அளித்தார்.

காப்பீட்டு நிறுவனம் சார்பில், தகுதிச் சான்று முடிவடைந்த லாரியை பொது இடத்தில் வைத்திருந்தது தவறு. மேலும் வாகனத்தில் தண்ணீர் நிரப்பி வைக்கப்படவில்லை. வண்டியை பழுது பார்த்த வகையில் ரூ.1,20,765.25 மட்டுமே செலவு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

மனுவை மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி வ.பாலசுந்தரகுமார், உறுப்பினர்கள் ச.சங்கர், ச.கற்பகச்செல்வி ஆகியோர் விசாரித்தனர். இறுதியாக சிவகாசி, தி யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம், டேங்கர் லாரி சேத வகைக்கு நஷ்ட ஈடாக ரூ.2,03,250 யை புகார் தாக்கல் செய்த நாளிலிருந்து தொகை கொடுத்து தீர்க்கும் வரை 6 சதவீத வட்டியுடன் 1 மாதத்திற்குள் வழங்க வேண்டும். மன கஷ்டத்திற்கு ரூ.10 ஆயிரம், வழக்குச் செலவிற்கு ரூ.3 ஆயிரம் சேர்த்து வழங்கவும் தீர்ப்பு வழங்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →