ஸ்ரீவில்லிபுத்தூர்: தொடர் திருட்டில் ஈடுபட்ட இளைஞரை போலீஸில் ஒப்படைத்த பொதுமக்கள்
ஸ்ரீவில்லிபுத்தூரில் தொடர் திருட்டில் ஈடுபட்ட நபரை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.
தமிழ்நாடுஸ்ரீவில்லிபுத்தூர்: தொடர் திருட்டில் ஈடுபட்ட இளைஞரை போலீஸில் ஒப்படைத்த பொதுமக்கள்
ஸ்ரீவில்லிபுத்தூரில் தொடர் திருட்டில் ஈடுபட்ட நபரை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் தொடர் திருட்டில் ஈடுபட்ட நபரை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர், ராமகிருஷ்ணாபுரத்தை அடுத்துள்ள கடைகள் தொடங்கி அரசு போக்குவரத்துப் பணிமனை வரையுள்ள பல்வேறு கடைகளில் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து குறிப்பிட்ட நபர் திருடி வந்துள்ளார். ஒருவரின் பையிலிருந்த ரூ.1200, இரு சக்கர வாகனங்களில் உள்ள உதிரி பாகங்கள் உள்ளிட்ட பல்வேறு திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்று வந்துள்ளது. இரு நாட்களுக்கு முன்னர் குறிப்பிட்ட நபரை அதிகாலை அப் பகுதியைச் சேர்ந்தவர்கள் பிடிக்க முற்பட்டபோது, சில அடி தூரத்தில் குறிப்பிட்ட நபர் தப்பி ஓடிவிட்டார்.
செவ்வாய்கிழமை காலை இதே சாலையில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு எதிரேயுள்ள மரக்கடை உள்ளிட்ட கடைகளின் பின்புறம் வழியே இந்த இளைஞர் இறங்கி திருடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கதவைப் பூட்டி வைத்து திருடனைப் பிடித்து கட்டி வைத்தனர். பின்னர் இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். வெகு நேரத்திற்கு பின்னர் ஒரு போலீஸார் வந்து திருடனை இரு சக்கர வாகனத்தில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்.
இது குறித்து இப் பகுதியில் உள்ளவர்கள் கூறுகையில், போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபடுவதில்லை. தொடர் திருட்டுச் சமபவங்கள் குறித்து தெரிந்தும் அதனை பொருட்படுத்தாமல் உள்ளார்கள் என்றனர்.