முகப்பு
தமிழ்நாடு

சிம்புவை கண்டித்து பெண்கள் போராட்டம்: நெல்லையில் 21 பேர் கைது

திருநெல்வேலியில் புதன்கிழமை நடிகர் சிம்பு, இசை அமைப்பாளர் அனிருத் ஆகியோரை கண்டித்து அவர்களது உருவப்படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட 21 பேரை போலீஸார் கைது செய்தனர்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:49 AM
பகிர்:

திருநெல்வேலியில் புதன்கிழமை நடிகர் சிம்பு, இசை அமைப்பாளர் அனிருத் ஆகியோரை கண்டித்து அவர்களது உருவப்படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட 21 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இசை அமைப்பாளர் அனிருத் இசையில் நடிகர் சிம்பு பாடிய பாடலில், பெண்களை விமர்சிக்கும் வகையில் இருப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து தமிழகம் முழுவதும் மாதர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நடிகர் சிம்புவை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி புதன்கிழமை அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் புதன்கிழமை திருநெல்வேலி சந்திப்பில் சிம்பு, அனிருத் உருவப்படங்களை எரித்து போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலர் எம். தங்கம், ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலர் வை. ராஜகுரு தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்ளிட்டோரை போலீஸார் தடுத்து வாகனத்தில் ஏற்ற முயன்றனர். அப்போது போலீஸாருக்கும், பெண்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட 11 பெண்கள் உள்பட 21 பேரை போலீஸார் கைது செய்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →